
செய்திகள் மலேசியா
சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி விவகாரங்களை கண்காணிக்க சிறப்பு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது: பாப்பாராயுடு
கிள்ளான்:
சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி விவகாரங்களை கண்காணிக்க சிறப்பு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது.
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு இதனை கூறினார்.
சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி அனுமதியோடு இந்த நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி நடவடிக்கை குழுவின் தலைவராக அன்பழகன் ஆறுமுகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
உதவித் தலைவராக எஸ். எஸ். பாண்டியன், செயலாளர் சுகுமாறன், துணை செயலாளர் வேணுகோபால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொருளாளராக பிரான்சிஸ், துணை பொருளாளராக விசாலெட்சுமி, பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் கேரல் ரிமா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சிலாங்கூர் மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கி இருக்கும் சவால்கள், பிரச்சனைகளுக்கு தீர்வு காண தொடர்ந்து போராடுவேன்
மேலும் குறைந்த மாணவர்களை கொண்ட தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை உயர்த்த தலைமை ஆசிரியர்கள் பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
எனது முயற்சியின் பலனாக இப்போது 16 தமிழ்ப் பள்ளிகள் நிலப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சிகள் எடுத்து வருகிறேன்.
எனக்கு முன்னர் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராக இருந்த டாக்டர் சேவியர் ஜெயகுமார், கணபதி ராவ் ஆகியோரும் ஏராளமான தமிழ்ப் பள்ளிகள் நிலப் பிரச்சினைக்கு தீர்வு கண்டனர்.
சிலாங்கூர் மாநில அரசு எப்போதும் மாநிலத்தில் உள்ள 99 தமிழ்ப் பள்ளிகளுக்கும் உதவி புரிந்து வருகிறது. இந்த உதவிகள் தொடரும் என்றார்.
சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மன்றத்தின் தலைவர் எஸ்.எஸ்.பாண்டியன் தலைமையில் கிள்ளான் WYNDHAM தங்கும் விடுதியில் சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மன்றத்தின் 41ஆவது மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தபோது அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே எஸ். எஸ். பாண்டியன் தமது உரையில் சிலாங்கூர் மாநிலத்தில் 99 தமிழ்ப் பள்ளிகளில் 26,000 மாணவர்கள் படிக்கும் வேளையில் 2,000 ஆசிரியர்கள் பணி புரிகின்றனர்.
சிலாங்கூர் மாநில அரசு தமிழ்ப் பள்ளிகளுக்கு மிகப்பெரிய அளவில் உதவி வருவதற்கு பாண்டியன் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 11:33 pm
மாணவி மணிஷாப்ரீத் கொலை வழக்கு; 48 மணி நேரத்திற்குள் தீர்க்கப்பட்டது: ஹுசைன் ஒமார் கான்
July 1, 2025, 11:28 pm
ஹிஷாமுடினின் இடைநீக்கம் குறித்து அம்னோ உச்சமன்றம் விவாதிக்கவில்லை: ஜாஹித்
July 1, 2025, 10:48 pm
பள்ளிக்கு முன் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஆடவர் உயிர் தப்பினார்
July 1, 2025, 1:08 pm