
செய்திகள் மலேசியா
கோல லங்காட் வட்டாரத்தில் அமையவிருக்கும் கருமக்கிரியை சடங்குகளுக்கான மண்டபம்; சிலாங்கூர் இந்தியர்களுக்கு பயனாக இருக்கும்: பாப்பாராயுடு
கோல லங்காட்:
கோல லங்காட் வட்டாரத்தில் அமையவிருக்கும் கருமக்கிரியை சடங்குகளுக்கான மண்டபம் சிலாங்கூர் இந்திய மக்களுக்கு பயனாக இருக்கும்.
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீ. பாப்பாராயுடு இதனை கூறினார்.
கோலலங்காட் மோரிப் கடற்கரை ஓரத்தில் உள்ள கருமக்கிரியை செய்யும் இடம் தற்போது சுற்றுலா தளமாக மாறி வருகிறது.
இதனால் அப்பகுதியில் நம் சமுக மக்கள் முறையாக சடங்குகளை செய்ய முடியவில்லை.
இப்பிரச்சினை தொடர்பில் மக்கள் கொடுத்த குரலுக்கு செவிசாய்த்த மாநில அரசு புதிய இடத்தை அடையாளம் கண்டுள்ளது.
தும்போக் தோட்டத்தின் அருகில் உள்ள கடற்கரை ஓரத்தில் இந்த கருமக்கிரியை மண்டபம் கட்டுவதற்கான இடம் அடையாளம் கண்டுள்ளது.
இம்மண்டபத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் பாதி மண் அரிப்பால் பாதிப்பட்டுள்ளது.
இருந்தாலும் எஞ்சிய பகுதியில் அனைத்து வசதிகளுடன் கருமக்கிரியை மண்டபம் கட்டப்படும். அதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படும்.
இப்புதிய கரிமக்கிரியை மண்டபம் இங்குள்ள மக்களைத் தவிர்த்து ஒட்டுமொத்த சிலாங்கூர் வாழ் இந்தியர்களுக்கும் பயனாக இருக்கும் என்று பாப்பாராயுடு நம்பிக்கை தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 1:08 pm
2025ஆம் ஆண்டுக்கான மலேசிய தின கொண்டாட்டங்கள்; பினாங்கில் நடைபெறும்: ஃபஹ்மி ஃபட்சில்
July 1, 2025, 1:06 pm