
செய்திகள் மலேசியா
புத்ரா ஹைட்ஸ் பகுதியில் 2-ஆம் கட்ட எரிவாயு குழாய் சீரமைப்பு பணிகள் 2026 மூன்றாம் காலாண்டில் தொடங்கும்
கோலாலம்பூர்:
புத்ரா ஹைட்ஸ் பகுதியில் 2-ஆம் கட்ட எரிவாயு குழாய் சீரமைப்பு பணிகள் 2026-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் தொடங்கும் என்று தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை தெரிவித்தது.
இந்தச் சீரமைப்பு பணியில் சுமார் 200 மீட்டர் நீளமுள்ள மூன்று புதிய குழாய்கள் பொருத்தப்படும்.
அதிக பாதுகாப்பும் நீடித்த தன்மையும் பெறும் வகையில் இந்த மூன்று புதிய குழாய்கள் கான்கிரீட் அடித்தளங்களுக்குள் பதியப்படவுள்ளன.
இந்தக் குழாய் வடிவமைப்பு பணிகள் தற்போது இறுதிகட்டத்தில் உள்ளது என்று தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை அலுவலகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக, சேதமடைந்த பகுதியை உறுதிப்படுத்த 210 மீட்டர் அளவிலான தற்காலிக குழாய் அமைக்கப்பட்டது.
இந்தத் தற்காலிக குழாயில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு சோதனைகளில் கசிவுகள் அல்லது அழுத்தப் பிரச்சனைகள் எதுவும் கண்டறியப்படவில்லை.
அதனால் இந்தக் குழாயில் இன்று எரிவாயு விநியோகம் தொடங்கும் என்று தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை அலுவலகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 1:08 pm
2025ஆம் ஆண்டுக்கான மலேசிய தின கொண்டாட்டங்கள்; பினாங்கில் நடைபெறும்: ஃபஹ்மி ஃபட்சில்
July 1, 2025, 1:06 pm