
செய்திகள் மலேசியா
வயது முதிர்ந்த ஆடவரைக் கொலை செய்த மாற்றுத்திறனாளி இளைஞர் குற்றஞ்சாட்டப்பட்டார்
தானா மேரா:
வயது முதிர்ந்த ஆடவர் ஒருவரைக் கொலை செய்த விவகாரத்தில் மாற்றுத்திறனானி இளைஞர் இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
குற்றஞ்சாட்டப்பட்ட 18 வயதான துவான் முஹம்மத் இஸ்மால் ஃபிர்டாவுஸ் மீது கொலை குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது.
மாஜிஸ்திரேட் துன் ஃபய்ஸ் ஃபிக்ரி முன்னிலையில் கொலை குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டு அவரும் புரிந்ததாக தலையசைத்தார்.
இருப்பினும், அவரிடமிருந்து எந்தவொரு ஒப்புதல் வாக்குமூலங்களும் நீதிமன்றம் பெறவில்லை.
60 வயது மதிக்கத்தக்க ஷம்சுடின் முஹம்மத் என்ற ஆடவரை கம்போங் பூலோ, குவால் ஈப்போ எனும் பகுதியில் அவர் கடந்த ஜூன் 19ஆம் தேதி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார்.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 302இன் கீழ் கொலை குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்ட நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 40 ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறை அல்லது மரண தண்டனை மற்றும் 12 பிரம்படிகள் விதிக்கப்படலாம்.
இந்த கொலை வழக்கு விசாரணையைத் துணை அரசு வழக்கறிஞர் சித்தி ஹஜார் மஸ்லான் வழிநடத்தினார்.
எதிர்வரும் செப்டம்பர் 2ஆம் தேதி இந்த வழக்கு விசாரணை மீண்டும் நீதிமன்றத்தால் செவிமடுக்கப்படும்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 1:08 pm
2025ஆம் ஆண்டுக்கான மலேசிய தின கொண்டாட்டங்கள்; பினாங்கில் நடைபெறும்: ஃபஹ்மி ஃபட்சில்
July 1, 2025, 1:06 pm