
செய்திகள் மலேசியா
அமைதி பேரணி நடத்துவதற்கு 5 நாள்களுக்கு முன் காவல்துறைக்கு அறிவிக்காதது இனி குற்றமல்ல: கூட்டரசு நீதிமன்றம்
கோலாலம்பூர்:
மலேசியாவில் அமைதியான பேரணிகளை நடத்த காவல் துறைக்கு ஐந்து நாட்களுக்கு முன் தகவல் தெரிவிக்காமல் இருப்பது இனிமேல் குற்றமாகாது என்று கூட்டரசு நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது.
பேரணி நடத்த 5 நாட்களுக்கு முன் காவல்துறைக்குத் தெரிவிக்காவிட்டால் தண்டனைக்கு வழிவகை செய்யும் 2012 ஆம் ஆண்டு அமைதி பேரணிகள் சட்டத்தின் பிரிவு 9(5), அரசியலமைப்பின் பிரிவு 10(1)(b) சட்டத்திற்கு விரோதமானது என்று
2012 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட அமைதிப் பேரணி சட்டம் (Peaceful Assembly Act 2012) இன் அறை 9(5) என்பது அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறி, அந்த சட்டப்பிரிவு இனி செல்லாது என்று தெங்கு மைமூன் துவான் மாட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு தெரிவித்தது.
அதுமட்டுமல்லாமல், அமைதி பேரணி நடத்துவதற்கு 5 நாள்களுக்கு முன் காவல்துறைக்கு அறிவிக்காததை குற்றமாகக் கருதுவது பொது மக்களின் அடிப்படை உரிமையைக் குறைக்கும் செயல் என நீதிபதிகள் குழு கூறியது.
முன்னதாக, மூடா கட்சியின் முன்னாள் பொது செயலாளர் Amir Hadi கடந்த 2022-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் உள்ள சோகோ வளாகத்திற்கு வெளியே ஒரு அமைதி போராட்டத்தை ஏற்பாடு செய்தபோது, காவல்துறைக்கு 5 நாள்களுக்கு முன் அறிவிக்காததற்காக குற்றம் சாட்டப்பட்டார்.
இந்த முடிவு அரசியலமைப்புக்கு முரணானது என்று கூறி Amir Hadi நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி, சுமார் 200 பேர் அமைதி பேரணியில் பங்கேற்றனர்.
இந்தப் பேரணியில், Littoral Combat Ship (LCS) திட்டம் தோல்வியடைந்ததற்கு பொறுப்பான அமைச்சர்கள், பதவி விலக வேண்டும் அல்லது நீதிக்கு முன்னிறுத்த வேண்டும் எனக் கோரப்பட்டது.
அமைதியான ஒன்றுகூடல் சட்டத்தின் பிரிவு 9(1) இன் கீழ் அமீர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில் Amir-க்கு எதிரான வழக்கு தற்போது வழங்கப்பட்ட கூட்டரசு நீதிமன்ற தீர்ப்பின்படி உயர்நீதிமன்றத்தில் கையாளப்பட வேண்டும் என்று கூட்டரசு நீதிமன்ற தலைமை நீதிபதி தெங்கு மைமூன் துவான் மாட் தனது தீர்ப்பில் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 1:08 pm
2025ஆம் ஆண்டுக்கான மலேசிய தின கொண்டாட்டங்கள்; பினாங்கில் நடைபெறும்: ஃபஹ்மி ஃபட்சில்
July 1, 2025, 1:06 pm
புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு; பெட்ரோனாஸ் பொறுப்பேற்க வேண்டும்: இயோ
July 1, 2025, 12:31 pm