நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் தலைமை இயக்குராக சுஹைலி பணியைத் தொடங்கினார்

கோலாலம்பூர்:

குற்றப்புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குநர் சுஹைலி, மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் தலைமை இயக்குராக டத்தோஸ்ரீ முஹம்மத் சுஹைலி முஹம்மத் ஜைன் தனது பணியைத் தொடங்கினார். 

இன்று ஜூலை 1-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை சுமார் 9.15 மணியளவில் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு  சுஹைலி வந்தடைந்தார்.

மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் தலைமை இயக்குராக 2027-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை ஈராண்டுகள் செயல்படுவார்.

போலிஸ்படையில் 26 ஆண்டுகள் சேவையற்றிய சுஹைலி மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் தலைமை இயக்குராக சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக நாட்டின் தலைமை செயலாளர் Tan Sri Shamsul Azri Abu Bakar தெரிவித்தார். 

அவர் தலைமையில் நாட்டின் எல்லைப் பாதுகாப்பு மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக Tan Sri Shamsul Azri Abu Bakar குறிப்பிட்டார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset