
செய்திகள் மலேசியா
போலீஸ்படை உயர்நெறியுடன் செயல்பட வேண்டும்: பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
நிபுணத்துவம், உயர்நெறி, பொது மக்களின் நம்பிக்கையைப் பெற்ற பாதுகாப்பு அமைப்பு என்ற தனது நிலையை அரச மலேசிய போலீஸ்படை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அரச மலேசிய போலீஸ்படை அதன் அதிகாரிகள், உறுப்பினர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களின் நலன் புறக்கணிக்கப்படாமலிருப்பதை உறுதி செய்யும் வேண்டும் என்று பிரதமர் அன்வார் கேட்டுக் கொண்டார்.
நாட்டின் புதிய போலீஸ் படைத் தலைவராக நியமிக்கப்பட டத்தோஸ்ரீ முஅம்மத் காலித் இஸ்மாயிலுடனான சந்திப்பின் போது இது குறித்து வினவியதாக பிரதமர் குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பின் போது விவாதிக்கப்பட்ட விஷயங்களில் நடப்பு சவால்களைக் கருத்தில் கொண்டு செயற்கை நுண்ணறிவு உள்பட போலீஸ் படையை நவீனப்படுத்துவதும் அடங்கும் என அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டார்.
மக்களுக்குஹ் தேவைப்படும் முக்கிய அமைப்பாக அரச மலேசிய போலீஸ்படை விளங்குகிறது.
நாட்டின் பாதுகாப்பும் அமைதியும் தொடர்ந்து கட்டிக்காக்கபடுவதை உறுதி செய்ய உயரிய கடப்பாடும் உத்தேகமும் தேவைப்படுகிறது என்றார் அவர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 1:08 pm
2025ஆம் ஆண்டுக்கான மலேசிய தின கொண்டாட்டங்கள்; பினாங்கில் நடைபெறும்: ஃபஹ்மி ஃபட்சில்
July 1, 2025, 1:06 pm