
செய்திகள் மலேசியா
சுற்றுலா ஓட்டுநர்களுக்கான கண்காணிப்பு நடவடிக்கை விரைவில் செயல்படுத்தப்படும்: தியோங்
கோலாலம்பூர்:
சுற்றுலா போக்குவரத்து ஓட்டுநர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் செயல்படத் தகுதியானவர்களாக இருப்பதை உறுதி செய்வதற்காக ஓட்டுநர் கண்காணிப்பு நடவடிக்கையை விரைவில் அமல்படுத்தும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருவதாக சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் தெரிவித்தார்.
மூவரின் உயிரைப் பறித்த புலாவ் பெர்ஹெந்தியான் படகு கவிழ்ந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
ஓட்டுநர் கண்காணிப்பு நடவடிக்கையில் படகு, பேருந்து ஓட்டுநர்கள் உட்பட அனைத்து சுற்றுலா போக்குவரத்து ஓட்டுநர்களுக்கும் கட்டாயமான மருந்து பரிசோதனை குறிப்பாக சிறுநீர் சோதன இடம்பெறும் என அமைச்சர் தியோங் கிங் சிங் கூறினார்.
தற்போது போக்குவரத்து அமைச்சின் கீழ் உள்ள சுற்றுலா போக்குவரத்து வாகனங்களின் கட்டுப்பாட்டை மீண்டும் சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சகத்திற்கு மாற்றும் திட்டமும் உள்ளது.
இதன்மூலம் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை ஒருங்கிணைந்த முறையில் மேற்பார்வை செய்ய முடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை மலேசியா தீவிரமாகக் கவனிக்கிறது என்று சுற்றுலா பயணிகள் எதிர்ப்பார்க்கின்றனர்.
அந்த எதிர்பார்ப்புகளை நாமும் பூர்த்தி செய்யவேண்டும்.
இந்தப் படகு கவிழ்ந்த சம்பவத்தை விழிப்பூட்டும் அழைப்பாக எடுத்துக்கொண்டு, தொழில் துறையில் உள்ள அனைவரும் அரசின் பாதுகாப்பு சீர்திருத்தங்களுக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 1:08 pm
2025ஆம் ஆண்டுக்கான மலேசிய தின கொண்டாட்டங்கள்; பினாங்கில் நடைபெறும்: ஃபஹ்மி ஃபட்சில்
July 1, 2025, 1:06 pm