நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வங்கி அதிகாரி என கூறி ஆசிரியரிடம் RM 8.9 இலட்சம் மோசடி

ஜோர்ஜ்டவுன்
பினாங்கு மாநிலத்தில் ஆசிரியையாக பணியாற்றும் 59 வயது பெண், ‘ஃபோன் ஸ்காம்’ குற்றவாளிகளால் RM890,000 இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவர் நேற்று பினாங்கு வடகிழக்கு மாவட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும். இந்த சம்பவம் கடந்த மே 10ஆம் தேதி நடந்ததாக அம்மாநில துணை காவல் தலைவரான முகமட் அல்வி சைனல் ஆபிடின் கூறினார்.

அன்றைய தினம், பாதிக்கப்பட்ட் ஆசிரியருக்கு ஓர் அழைப்பு வந்தது. அழைத்தவர் ஒரு உள்நாட்டு வங்கியின் பிரதிநிதி எனத் தன்னை அறிமுகப்படுத்தி, அவரின் பெயரில் கடன் அட்டை தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். ஆனால் அந்தக் கடன் அட்டை தமக்கு இல்லை என ஆசிரியை மறுத்துள்ளார்.

பின்னர், அந்த அழைப்பு ஒரு போலி போலீஸ் அதிகாரிக்கு மாற்றப்பட்டுள்ளது. அவர், ஜொகூர் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்தவர் எனச் சொல்லி, ஆசிரியை பணம் பதுக்கல் மற்றும் சட்டவிரோத நிதிப் பரிமாற்றத்தில் குற்றவாளி எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நிலையில், விசாரணைக்காக அவர் வைத்திருக்கும் அனைத்து பணத்தையும் ஒப்படைக்குமாறு கூறியதுடன், ஒத்துழைக்காவிட்டால் கைது ஆணை பிறப்பிக்கப்படும் என மிரட்டியுள்ளார்.

இதனை நம்பிய ஆசிரியை, மே 19 முதல் ஜூன் 5 வரை 23  வங்கி கணக்குகளுக்கு, 27 முறை ஆன்லைன் பரிமாற்றம் செய்துள்ளார். மொத்தமாக RM890,000 இழந்துள்ளார் என FMT செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த மோசடியை தன் நண்பரிடம் பகிர்ந்தபின்  உண்மை அறிந்து கொண்டு, பின்னர் அவர் போலீசில் புகார் அளித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள போலீசார், வங்கி விவரங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை கேட்டுத் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் சந்தேகத்திற்கிடமான அழைப்புகளை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset