நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

VEP அமலாக்கம்: முதல் ஒரு மணி நேரத்திற்குள் 10 சிங்கப்பூர் ஓட்டுநர்களுக்கு அபராதம்

ஜொகூர் பாரு:

VEP எனப்படும் வாகன நுழைவு அனுமதி  அமலாக்கம் கண்ட முதல் ஒரு மணி நேரத்திற்குள் 10 சிங்கப்பூர் ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிப்பட்டுள்ளது என்று சாலை போக்குவரத்து துறை தலைமை இயக்குநர் Aedy Fadly Ramli கூறினார்.

ஜொகூர் - சிங்கப்பூர் இடையிலான எல்லையில் VEP எனப்படும் வாகன நுழைவு அனுமதி  ஜூலை 1 ஆம் தேதி நள்ளிரவில் அமலுக்கு வந்தது. 

ஜூன் 29-ஆம் தேதி வரை 2,48,000க்கும் அதிகமான சிங்கப்பூர் பதிவு எண் கொண்ட வாகன ஓட்டுநர்கள் VEP-க்கு பதிவு செய்துள்ளனர். 

ஆனால், அதில் 17 விழுக்கான வாகன ஓட்டிகள் இன்னும் தங்கள் அனுமதிகளை செயல்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

வாகன ஓட்டுநர்களுக்குப் போதிய கால அவகாசம் வழங்கப்பட்டதையும் Aedy Fadly Ramli சுட்டிக் காட்டினார். 

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், எல்லைச் சோதனைச் சாவடிகள் போன்ற கோஸ்வே மற்றும் செக்கண்ட் லிங்க் ஆகிய இடங்களைத் தவிர்த்து, அமலாக்க நடவடிக்கைகள் அனைத்தும் வேறு இடங்களில் நடைபெறுகின்றன. 

இந்நிலையில், ஜொகூர் பாருவில் உள்ள Bangunan Sultan Iskandar சுங்க சாவடியில் போக்குவரத்து துறை அதிகாரிகள்  VEP இல்லாத கார்களை நள்ளிரவு 12 மணி முதல் நிறுத்தத் தொடங்கினர். 

அவர்களுக்கு RM300 அபராதம் விதிக்கப்பட்டன. விதிக்கப்பட்ட அபராதங்கள் அனைத்தும் மின்னணு முறையில் செலுத்தப்பட வேண்டும் என்று Aedy Fadly Ramli கூறினார். 

 VEP மலாக்கம் குறீத்துத் தாம் முன் கூட்டியே அறிந்திருந்தாலும் அது இவ்வளவு பெரிய அளவில் அமல்படுத்தப்படும் என்று தாம் எதிர்ப்பார்க்கவில்லை என்று  முதல் அபராதம் விதிக்கப்பட்ட ஓட்டுநரான 19 வயதான சிங்கப்பூர் மாணவர் Safir Farhan கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset