நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தோனேசிய அதிபர்  பிரபோவோவை சந்திக்க பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் ஜாகர்த்தா சென்றடைந்தார்

ஜாகர்த்தா:

இந்தோனேசிய அதிபர் பிரபோவோவை சந்திக்க பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ஜாகர்த்தா சென்றடைந்தார்

பிரதமர், அவரது குழுவினரை ஏற்றிச் சென்ற விமானம் உள்ளூர் நேரப்படி மதியம் 1 மணியளவில் கிழக்கு ஜாகர்த்தாவில் உள்ள ஹலிம் பெர்டனாகுசுமா விமான நிலையத்தில் தரையிறங்கியது.

மேலும் பிரதமரின் வருகையை இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ நேரில் வரவேற்றார்.

மெர்டேகா அரண்மனைக்குச் செல்வதற்காக புரோபோவோவுடன் அதிகாரப்பூர்வ வாகனத்தில் பிரதமர் பயணித்தார்.

அதற்கு முன் பிரதமருக்கு  இந்தோனேசிய தேசிய இராணுவம், இந்தோனேசிய தேசிய காவல்துறையைச் சேர்ந்த 75 குதிரைப்படை வீரர்கள் இணைந்து ஒரு பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர்.

இரு தலைவர்களையும் ஏற்றிச் செல்லும் வாகனத் தொடரணிக்காகக் காத்திருந்த மாணவர்களிடமிருந்து இரு நாடுகளின் கொடிகளையும் அசைத்தும் பறக்கவிட்டும் வரவேற்கப்பட்ட அன்வாரும் அவர்களை நோக்கி கையசைத்தும் வரவேற்கப்பட்டார்.

மெர்டேகா அரண்மனைக்கு வந்ததும், பிரபோவோவால் வரவேற்கப்பட்ட பிரதமர், அதிகாரப்பூர்வ வரவேற்பு விழாவிற்காக பிரதான மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset