நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் நெறிமுறை சார்ந்த கடன் வசூலுக்கான புதிய தொடக்கமாக மலேசிய தொழில்முறை கடன் வசூல் நிறுவனங்களின் சங்கம் அறிமுகம்

பெட்டாலிங் ஜெயா:

மலேசிய நிதி சூழலில் ஒரு முக்கியமான முன்னேற்றமாக, மலேசிய தொழில்முறை கடன் வசூல் நிறுவனங்களின் சங்கம் (APDCAM) இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது.

தொழில்துறை தரநிலைகளை உயர்த்துவதோடு, நம்பிக்கையும் நெறிமுறையும் நிரம்பிய வசூல் நடைமுறைகளை உருவாக்குவதே APDCAM-இன் நோக்கமாகும் என இச் சங்கத்தின் நிறுவனர், தலைவர் ஹாஜி ஜாஃபா ஹஸ்ரின் தெரிவித்தார்.

இது ஒரு சங்கத்தின் வெறும் தொடக்கம் மட்டும் அல்ல. இது ஒரு நம்பிக்கைக்குரிய இயக்கத்தின் உதயமாகும்.

தொழில்முறைத் தன்மை, நியாயம், மரியாதையை முன்னிறுத்தும் ஒரு புதிய பாதையில் நாம் பயணிக்கிறோம் என அவர் வலியுறுத்தினார்.

நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்

அராஜகமான வசூல் நடைமுறைகள் குறித்து உள்ள பொது கருத்தை மாற்ற, APDCAM உறுதியான, நியாயமான நடைமுறைகளை உருவாக்குகிறது.

வசூல் என்பது வெறும் பணத்தைப் பெறுவது மட்டும் அல்ல; அது நிதிப் பொறுப்பையும் மனித மரியாதையையும் சமநிலைப்படுத்தும் செயல். 

நியாயமான வசூல் முறை சந்தையை நிலைப்படுத்தும், வணிகங்களை உறுதியளிக்கும் மற்றும் கடனாளிகளுக்கு மறுவாழ்வு தரும் என ஹாஜி ஜாஃபா கூறினார்.

APDCAM-இன் நான்கு முக்கிய தூண்கள்

1. கல்வி வழியாக தொழில்முறை வளர்ச்சி

கடன் வசூலாளர்களுக்கான சான்றிதழ் பயிற்சி திட்டங்கள். 
இதில் சட்ட அறிவு, பேச்சுவார்த்தைத் திறன், மற்றும் நுகர்வோர் உரிமைகள் அடங்கும்.

2. பங்குதாரர் ஒத்துழைப்பு

அரசு அமைப்புகள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் உட்பட பல தரப்புகளுடன் நீடித்த ஒத்துழைப்பு.

3. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

ஊடக வலையமைப்பு மற்றும் தகவல் பிரச்சாரங்கள் மூலம் கடன் வசூல் தொடர்பான தவறான புரிதல்களை மாற்றுதல்.

சட்ட மாற்றங்களுக்கு ஆதரவு

Consumer Credit Act (CCA), Consumer Credit Commission (CCC) ஆகியவற்றின் கீழ் மலேசிய நிதித்துறையில் வரும் மாற்றங்களை முழுமையாக ஏற்று செயல்பட APDCAM தயாராக உள்ளது.

இச்சட்டம் நுகர்வோர் உரிமைகளை உறுதிப்படுத்தும் முக்கிய சட்டமாகும். தொழில்துறையின் ஒழுங்குமுறைக்கு இது வழிகாட்டியாக இருக்கும்.

சீர்திருத்தம் மற்றும் ஒத்துழைப்பு

சரியான கடன்பெற்றவர்கள் தவறான முறையில் வற்புறுத்தப்படமாட்டார்கள். நியாயமான, சட்டப்படி வசூல்தான் எங்கள் வழிமுறை என தலைவர் உறுதிபடக் கூறினார்.

அவர், மலேசியா முழுவதும் உள்ள அனைத்து கடன் வசூல் நிறுவனங்களையும் APDCAM-இன் உறுப்பினராக இணையுமாறு அழைத்தார்.

எதிர்காலத்தை நோக்கி

கடன் வழங்குபவர்களும், பெறுபவர்களும் மற்றும் கட்டுப்பாட்டாளர்களும் ஒருங்கிணைந்த நம்பிக்கையின் பாலமாக APDCAM செயல்பட உள்ளது.

நிதிப் பொறுப்பு மற்றும் மனித பரிவை ஒருங்கிணைக்கும் வசூல் சூழலை நாம் கட்டியெழுப்புவோம் என ஹாஜி ஜாஃபா தனது உரையில் உறுதியளித்தார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset