நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நயிமாவின் சொத்து முடக்கத்தைத் தற்காலிகமாக நிறுத்த உயர் நீதிமன்றம் அனுமதி 

கோலாலம்பூர்:

லண்டனிலுள்ள மறைந்த முன்னாள் நிதியமைச்சர் துன் டைய்ம் ஜைனுடினின் மனைவி நயிமாவின் சொத்து முடக்கத்தைத் தற்காலிகமாக நிறுத்த உயர் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது. 

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எம்ஏசிசி லண்டனிலுள்ள £132 மதிப்புள்ள நயிமாவின் சொத்துகளை முடக்க உத்தரவிட்டிருந்தது. 

இந்த நீதிமன்ற உத்தரவைத் தற்காலிகமாக நிறுத்த நயிமா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

நயிமா தாக்கல் செய்த மனுவை நீதிபதி அஸார் ஏற்றுக் கொண்டு சொத்து முடக்கத்தை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டார்.

இங்கிலாந்தின் ஸ்டு.மேரி ஆக்ஸ் (St Mary Axe), ஒன் கிரவுன் கோர்ட் (One Crown Court) பகுதியில் உள்ள 2 வணிகக் கட்டடங்கள், ப்ரயன்ஸ்டன் ஸ்கொயர், ப்ரயன்ஸ்டன் மியூஸ், மற்றும் லாங்காஸ்டர் கேட் ஆகிய இடங்களில் உள்ள 3 சொகுசு குடியிருப்புகள், கிளாஸ்டர் பிளேஸ் பகுதியில் உள்ள 2 குடியிருப்புகள், இல்ஹாம் அறக்கட்டளையின் கீழ் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் CAF வங்கி லிமிடெட்டில் உள்ள ஒரு வங்கிக் கணக்கு ஆகிய சொத்துகளுக்கான முடக்கும் நடவடிக்கையைத் தற்காலிகமாக நிறுத்த உயர் நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது.

சொத்துக்களை முடக்குவது தொடர்பான முக்கிய நடவடிக்கைகளில் தலையிட நயிமாவின் விண்ணப்பத்தை ஜூலை 9 ஆம் தேதி விசாரிக்க நீதிமன்றம் நிர்ணயித்தது.

கடந்த ஜூன் 3-ஆம் தேதி பணமோசடி தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நிதியுதவி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் வருமானம் சட்டம் 2001 (AMLATFPUAA 2001) இன் பிரிவு 53 இன் கீழ், மேற்கூறிய சொத்துக்களை முடக்க கோரிய மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விண்ணப்பத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset