நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எஸ்எஸ்டி வருவாயை மத்திய அரசு மாநில அரசுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும்: சாவ் கோன் இயோ

ஜார்ஜ் டவுன்:

எஸ்எஸ்டி வருவாயின் ஒரு பகுதியை மாநில அரசுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்குமாறு பினாங்கு மாநில முதலமைச்சர் சாவ் கோன் இயோ மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

அதன் மூலம் மாநில வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தக் கோரிக்கையை மத்திய அரசு புறக்கணித்து விடக்கூடாது என்றும் இப்போது அதைப் பற்றி விவாதிக்க வேண்டிய நேரம் இது என்றும் அவர் கூறினார். 

கடந்தாண்டு பினாங்கு மாநிலத்தில் சேகரிக்கப்படும் வரிகளில் 20 விழுக்காட்டை மாநிலத்திற்கு வழங்குமாறு தாம் வைத்த கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதலளிக்கவில்லை என்றும் அது குறித்து பரிசீலனை செய்யவில்லை என்றும் சாவ் தனது அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். 

இந்தக் கோரிக்கை குறித்து மற்ற மாநில மந்திரி பெசார்களுடன் கலந்தாலோசனை செய்த பின் மத்திய அரசிடம் மீண்டும் இதை கொண்டு செல்ல முயற்சிப்பேன் என்று அவர் கூறினார். 

வரியின் கிடைக்கப்பெறும் வருவாயை வைத்து மாநில மக்களுக்கான கூடுதல் நலத்திட்டங்களை முன்னெடுக்க இயலும் என்றார் அவர். 

மத்திய அரசால் 20 விழுக்காடு வரி பணத்தைக் கொடுக்க இயலாவிடின் 10 விழுக்காடு வழங்க பரிசீலனை செய்ய வேண்டும்.

நாட்டில் இரண்டாவது மிக அதிக முதலீட்டை பெற்ற மாநிலமாக பினாங்கு அறிவிக்கப்பட்டது என்பது இதற்கு சான்றாகும்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset