நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தியோ பெங் ஹொக் குடும்பத்துக்கு  உதவித்தொகை வழங்க தயாராகும் ஊழல் தடுப்பு ஆணையம்

கோலாலம்பூர்:
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) விசாரணைகளில் ஈடுபடும் நபர்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் பல மறுசீரமைப்புகளை மேற்கொண்டுள்ளது.

“சாட்சிகள் மற்றும் சந்தேகநபர்களிடம் வாக்குமூலம் பெறுவதற்காக வீடியோ பதிவு வசதியுடன் கூடிய விசாரணை அறைகள் அமைக்கப்பட்டுள்ளன என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் அசாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

மேலும், விளக்கம் தரு வருபவர்களை எளிதாக அணுகக் கூடிய வகையில் உட்பகுதி விசாரணை அறை கட்டப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

மேலும் அனைத்து எம்ஏசிசி கட்டிடங்களிலும் பாதுகாப்புத் தரநிலைக்கேற்ப இரும்புக் கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

இந்த முன்னேற்றங்களுக்குப் பின்பும், 2009ஆம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்த தியோ பெங் ஹொக்கின் குடும்பத்துக்கு, அவரது பிள்ளையின் வளர்ச்சி மற்றும் கல்வி தேவைகளுக்காக, உதவித்தொகை (goodwill contribution) வழங்க தயாராக இருப்பதாக எம்ஏசிசி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset