
செய்திகள் மலேசியா
வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து தீப்பிடித்து அழிந்தது
கோலாலம்பூர்:
வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையில் இன்று காலை ஒரு சுற்றுலா பேருந்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால், பேருந்து முழுவதும் தீக்கிரையடைந்தது. பயணிகள் பேருந்தாக இருந்தும், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலையின் கிலோமீட்டர் 20.2 பகுதியில் உள்ள ஓய்விடத்தின் (R&R) அருகிலேயே காலை 8.14 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீ கெம்பங்கான் தீயணைப்பு நிலையத்திலிருந்து ஏழு வீரர்கள் மற்றும் ஒரு தீயணைப்பு வண்டி அவசரமாக அழைக்கப்பட்டு, 8.25 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்து, குறுகிய நேரத்தில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சுற்றுலா பேருந்தின் பதிவு எண் CRR 9522 என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த பேருந்து 90 சதவிகிதம் வரை தீயில் அழிந்துவிட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை உதவி இயக்குநர் (செயல்பாடுகள்) அகமத் முக்லிஸ் முக்தார் கூறினார்.
தற்போது வரை எந்த உயிரிழப்பும், காயமும் ஏற்படவில்லை எனவும் அவர் தனது அறிக்கையில் உறுதிப்படுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
July 16, 2025, 5:16 pm
அம்னோவின் இஷாம் ஜாலில் விடுவிப்புக்கு எதிராக தேசிய சட்டத்துறை அலுவலகம் மேல்முறையீடு தாக்கல்
July 16, 2025, 4:37 pm
கெஅடிலான் கட்சியை அழிப்பது தான் ரபிசியின் உண்மையான நோக்கமா?: டத்தோ அஸ்மான் கேள்வி
July 16, 2025, 4:35 pm
உணவகத்தில் ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 65 வயதுடைய முதியவர் கைது: போலிஸ்
July 16, 2025, 4:34 pm
மேக்ஸ் நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்தது: 13 பேர் உயிர் தப்பினர்
July 16, 2025, 4:08 pm
4 மாதங்களில் 2,467 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன: நோரைனி அஹமத்
July 16, 2025, 4:00 pm
269ஆவது மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்தின் கூட்டம்: சிலாங்கூர் சுல்தான் தலைமை தாங்குகிறார்
July 16, 2025, 3:57 pm
திருமண முகாமில் நிர்வாண நிகழ்ச்சி: காவல் துறை உறுதிப்படுத்தியது
July 16, 2025, 3:42 pm
அலுவலக உதவியாளர் RM1.26 லட்சம் இழந்த மோசடி!
July 16, 2025, 3:33 pm