நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரஷ்யா நாட்டிற்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம்: இஸ்தானா நெகாராவில் விளக்க கூட்டம் நடைபெற்றது 

கோலாலம்பூர்: 

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் ரஷ்யா நாட்டிற்குப் பயணமாகவுள்ளார். 

அதற்கு தயாராகும் நிலையில் இஸ்தானா நெகாராவில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இது தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டது. 

இந்த விளக்கம் வழங்கும் கூட்டத்தில் நாட்டின் வெளியுறவு அமைச்சின் தலைமை செயலாளர் டத்தோஶ்ரீ அம்ரான் முஹம்மத் சின், கலந்து கொண்டு விளக்கம் அளித்தார். 

மேலும், மலேசியாவுக்கான ரஷ்யா நாட்டு தூதர் NAIYL M LATYPOV கலந்து கொண்டார். வெளியுறவு அமைச்சின் மூத்த அதிகாரி டத்தோ ரொசைனோர் ரம்லி ஆகியோர் கலந்து கொண்டனர். 

இது தொடர்பான புகைப்படங்கள் யாவும் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset