நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோத்தா ராஜா தொகுதி மக்களை மாட் சாபு 30 நாட்களுக்கு சந்திக்க வேண்டும்; இல்லையென்றால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்: சேகர்

கிள்ளான்: 

கோத்தா ராஜா தொகுதி மக்களை அதன் நாடாளுமன்ற உறுப்பினர் மாட் சாபு 30 நாட்களுக்கு சந்திக்க வேண்டும்.

இல்லையென்றால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் சிலாங்கூர் மாநில உரிமை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செகு சேகர் கூறினார்.

அண்மைய காலமாக கோத்தா ராஜா நாடாளுமன்ற தொகுதியில் பல்வேறு பிரச்சினைகள் நடந்து வருகிறது.

ஸ்ரீ மூடாவை தவிர்த்து பல்வேறு இடங்களில் தொடச்சியாக வெள்ளப் பிரச்சினை ஏற்படுகிறது.

அதே வேளையில் கம்போங் ஜாவாவில் உள்ள இந்தியர்களுக்கு சொந்தமான வீடுகள் உடைப்படும் அபாயத்தை எதிர்நோக்கி உள்ளன. வீடுகளை காப்பாற்ற மக்கள் போடிய போது மாட் சாபு அங்கு வரவே இல்லை.

இதே போன்று இப்பகுதியில் பல்வேறான உள்கட்டமைப்பு பிரச்சினைகள் உள்ளது.இப்பிரச்சினைகள் எதிலும் அவர் கவனம் செலுத்தவில்லை.

ஏன் இங்குள்ள மக்கள் அவர் காணாமல் போய் விட்டார் என கூறுகின்றனர்.இதன் அடிப்படையில் தான் இன்று மாட் சாபுவின் அலுவலகத்திற்கு வந்து மகஜர் ஒன்றை வழங்கினோம்.

இத்தொகுதியில் உள்ள பிரச்சினைகளில் அவர் கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக அடுத்த 30 நாட்களுக்கும் இத்தொகுதி மக்களுடன் அவர் சந்திப்பு கூட்டம் நடத்த வேண்டும்.

இல்லையென்றால் இத்தொகுதின் மக்களுடன் புத்ராஜெயாவில் உள்ள அவர் அமைச்சின் முன் மாபெரும் போராட்டம் நடத்துவோம். இதுவே எங்களின் முடிவு என்று செகு சேகர் கூறினார்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset