நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குழந்தையின் பாலியல் துன்புறுத்தல் காணொலி விற்பனை செய்யப்பட்ட சம்பவம் உண்மை: சைபுடின்

கோலாலம்பூர்:

பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட மூன்று மாத குழந்தையின் காணொலி பதிவுகள் விற்பனைக்காக பகிரப்பட்ட சம்பவத்தை உள்துறை அமைச்சர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில்  உறுதிப்படுத்தினார். 

இந்த விவகாரம் குறித்து நள்ளிரவு 12.30 தனக்குத் தெரிவிக்கப்பட்டதாக  சைபுடின் தனது அமைச்சகத்தின் மாதாந்திர கூட்டத்தில் உரையாற்றும் போது குறிப்பிட்டார். 

மூன்று மாத குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதைக் காணொலியாக பதிவு செய்து அதனை விற்பனை செய்துள்ளனர்.

இவ்வகை சம்பவங்கள் பொதுமக்களுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தக் கூடியவை என்பதால், மேலதிக தகவல்களை வழங்க அவர் மறுத்தார்.

ஒரே ஒரு சம்பவம் தான் என்றாலும், அது செய்தித்தாளின் முன்னப்பக்கத்தில் வெளியானால், பொதுமக்களின் எதிர்வினைவே வேறுபட்டதாகி விடும். 

அதனால், அதன் தொடர்பான விரிவான தகவல்களை நான் பகிர விரும்பவில்லை என்று சைபுடின் தெரிவித்தார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset