நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நியூசிலாந்து நாட்டின் உயர் அதிகாரிகளுடன் துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி சந்திப்பு 

வெல்லிங்டன்: 

நியூசிலாந்து நாட்டிற்கு நாட்டின் துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி அதிகாரப்பூர்வ அலுவல் பயணம் மேற்கொண்டுள்ளார். 

நியூசிலாந்து நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டு இன்றுடன் மூன்றாவது நாளாகிறது. 

புறநகர், வட்டார மேம்பாட்டு அமைச்சராக உள்ள டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி, அந்நாட்டின் அமைச்சர்களைச் சந்தித்துள்ளார். 

பூர்வக்குடி மக்களின் நலன், அவர்களுக்காக வகுக்கப்பட்டுள்ள கொள்கைகள், தொடர்பாக மலேசியா- நியூசிலாந்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டன. 

ஓராங் அஸ்லி சமூகத்தின் மேம்பாட்டிற்கு இரு நாட்டின் சந்திப்பு முக்கியத்துவமாக பார்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், நியூசிலாந்து வெளியுறவு அமைச்சர் WINSTON PETERS தலைமையிலான மதிய விருந்து நிகழ்ச்சிகளிலும் துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி கலந்து கொள்கிறார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset