
செய்திகள் மலேசியா
மலேசிய தூதரகம் ஈரானில் தற்காலிகமாக மூடல்: அனைத்து மலேசியர்களும் நாடு திரும்ப உத்தரவு
புத்ராஜெயா
ஈரான்–இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், மலேசியா ஈரானில் உள்ள தன்னுடைய தூதரகத்தை தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளது.
தூதரகப் பணியாளர்கள் உட்பட ஈரானில் உள்ள அனைத்து மலேசியர்களும் உடனடியாக நாடு திரும்ப வேண்டுமென வெளியுறவு அமைச்சர் முகமது ஹாசன் உத்தரவிட்டுள்ளார்.
“முழு தூதரக ஊழியர்கள் மற்றும் மலேசியர்கள் ஈரானை விட்டு வெளியேற வேண்டும்,” என அவர் கூறினார்.
தற்போது ஈரானில் கோம் நகரில் மூன்று மாணவர்கள் மற்றும் இஸ்ஃபஹான் நகரில் ஒருவரும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக மலேசியர்கள் ஜூன் 20க்குள் நாடு திரும்புவார்கள் என தகவல்தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாதில் தெரிவித்திருந்தார்.
ஈரானின் அணுசக்தி மற்றும் இராணுவ முகாம்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது, இதனால் பொதுமக்கள் மற்றும் இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானும் பதிலடி கொடுப்பாக டெல்அவிவ், ஜெருசலேம் பகுதிகளை நோக்கி ஏராளமான ஏவுகணைகளை ஏவி தாக்கியுள்ளது.
மலேசியா, தனது குடிமக்களின் பாதுகாப்பிற்காக நடவடிக்கை எடுத்து வருவதாகவும், தேவையான விசா ஏற்பாடுகள் முன்னெடுப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 11:33 pm
மாணவி மணிஷாப்ரீத் கொலை வழக்கு; 48 மணி நேரத்திற்குள் தீர்க்கப்பட்டது: ஹுசைன் ஒமார் கான்
July 1, 2025, 11:28 pm
ஹிஷாமுடினின் இடைநீக்கம் குறித்து அம்னோ உச்சமன்றம் விவாதிக்கவில்லை: ஜாஹித்
July 1, 2025, 10:48 pm
பள்ளிக்கு முன் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஆடவர் உயிர் தப்பினார்
July 1, 2025, 1:08 pm