
செய்திகள் மலேசியா
மலேசிய தமிழ் திரைப்படம் ‘மிருகசிரிஷம்’ பாக்ஸ் ஆபிஸில் தடுமாறுகிறது: தயாரிப்பாளர் வருத்தம்
பெட்டாலிங் ஜெயா:
விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றும், பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த அளவிற்கு தடம் பதிக்க தவறி வரும் ‘மிருகசிரிஷம்’ திரைப்படத்திற்கு, தயாரிப்பு குழுவினர் மக்களின் ஆதரவை நாடியுள்ளனர்.
புதுமுக தயாரிப்பாளரும், FST நிறுவனத்தின் தலைமை நிர்வாகியுமான டாக்டர் சாய் சுதன், சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார்.
“இந்த படம் மலேசிய தமிழ் திரைப்படத் துறையின் புதிய படிக்கட்டாக அமைய வேண்டும். நாங்கள் ஒலி வடிவமைப்பு, ஒளிப்பதிவு, இசை, கலை அமைப்பு, நடிப்பு மற்றும் புத்திசாலித்தனமான திரைக்கதை என அனைத்து அம்சங்களிலும் தரமான முயற்சிகளை செய்துள்ளோம்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இது ஒரு கனவுப் பயணம்; உங்கள் ஆதரவு தேவை” என கேட்டுக் கொண்டுள்ளார்.
குறிப்பாக கடந்த இரு நாட்களில் பெற்ற சிறந்த விமர்சனங்கள் கூட, வார இறுதி நாட்களில் திரையரங்குகளில் டிக்கெட் விற்பனையை அதிகரிக்க முடியவில்லை என சுதன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது தங்கள் குழுவுக்கு மட்டும் அல்ல; ஒட்டுமொத்த மலேசியா திரைப்படக் கலையின் நலனுக்காகவே உருவாக்கப்பட்டது. தயவுசெய்து இந்த முயற்சியை சிதைய வேண்டாம்,” என அவர் தெரிவித்தார்.
அதோடு இன்றும் நாளையும், அதிக அளவில் டிக்கெட் வாங்கும்படி கேட்டுக்கொண்டு, மக்களுக்கு வலைதளங்களில் பகிர்வு, மதிப்புரை அல்லது குறைந்தபட்சமாக ஒரு ‘லைக்’ கொடுப்பதற்கும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மலேசியர்கள் தரமான உள்ளூர் திரைப்படங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதேபோல் ‘மிருகசிரிஷம்’ திரைப்படத்திற்கு உங்கள் பங்களிப்பை வழங்குங்கள் என்று சுதன் தனது பதிவில் முடிவுறுத்தியுள்ளார்.
- தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 1:08 pm
2025ஆம் ஆண்டுக்கான மலேசிய தின கொண்டாட்டங்கள்; பினாங்கில் நடைபெறும்: ஃபஹ்மி ஃபட்சில்
July 1, 2025, 1:06 pm