நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈரானுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க தூதரகத்தின் முன் நூற்றுக்கணக்கானோர் கூடி முழக்கம் 

கோலாலம்பூர்:

வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே சுமார் 500 பேர் கூடி, பாலஸ்தீனத்திற்கு ஒற்றுமையை வெளிப்படுத்தவும், குறிப்பாக ஈரான் மீதான தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இஸ்ரேலுக்கு வாஷிங்டன் தொடர்ந்து ஆதரவளிப்பதைக் கண்டித்தும் முழக்கமிட்டனர்.

தபோங் ஹாஜி பள்ளிவாசலிலிருந்து அமெரிக்கத் தூதரகத்திற்கு பேரணியாகச் சென்ற அவர்கள், பாலஸ்தீனக் கொடிகளை அசைத்து, “சுதந்திர பாலஸ்தீனம்”, “ஈரான் இஸ்லாமியக் குடியரசு நீடூழி வாழ்க”, “ஈரான் பாலஸ்தீனத்துடன் நிற்கிறது” என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

இந்த பேரணியில் அமனா தகவல் தொடர்பு இயக்குநர் காலித் சமத், பூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் சுஹைசான் கயாத், மூத்த ஆர்வலர் தியான் சுவா, அரசு சாரா அமைப்பு மந்திரி ஒருங்கிணைப்பாளர் வோங் குகுய்,மலேசிய இஸ்லாமிய அமைப்புகளின் ஆலோசனைக் குழுவின் (மாபிம்) தலைவர் சேகு முஹம்மத் அஸ்மி அப்துல் ஹமீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset