
செய்திகள் மலேசியா
தடுப்பூசி எடுக்க மறுத்த ஆசிரியையை பணிநீக்கம்; நிர்வாகத்தின் முடிவில் தவறில்லை: தொழில் நீதிமன்றம் தீர்ப்பு
பெட்டாலிங் ஜெயா:
கோவிட்-19 தடுப்பூசி எடுக்க மறுத்ததால், ஷா ஆலமில் உள்ள தனியார் பள்ளியில் பணிநீக்கம் செய்யப்பட்ட டிபு என்ற ஆசிரியரின் வழக்கு, தொழில் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது.
2021-ல் அந்த பள்ளியில் RM15,500 ஊதியத்தில் பணியில் சேர்ந்த டிபு, அலெர்ஜி காரணமாக தடுப்பூசி எடுக்க முடியாது எனவும், தடுப்பூசி கட்டாயம் செய்யும் சட்டம் எதுவும் பணி ஒப்பந்தத்தில் இல்லையெனவும் வாதிட்டார் என FMT செய்தி வெளியிட்டுள்ளது
ஆனால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் தடுப்பூசி விவகாரத்தில் பலமுறை பல காரணங்களை தெரிவித்தார் என்றும், அதோடு அவர் தடுப்பூசி எடுக்க மறுப்பது, ஒப்பந்த விதிகளையும், ஊழியர் பாதுகாப்பு சட்டத்தையும் மீறுகிறது” என்று பள்ளி நிறுவனம் கூறியது.
நிறுவனம் ஊழியர்களுக்காக தடுப்பூசி செலவையும் எற்றதாகவும், Zoom சந்திப்பு வாயிலாக கொள்கைகள் விளக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே அவரது விசாவை ரத்து செய்து 9 நாட்களில் நாடு விட்டு செல்லச் சொன்னதற்கும் டிபு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
சம்பந்தப்பட்ட் ஆசிரியரின் வேலை நேரடி தொடர்புகள் தேவைப்படும் பணியாக இருந்ததால், தொலைபயன்பாட்டு ஏற்பாடுகள் சாத்தியமில்லை. தடுப்பூசி மறுப்பு முறையற்றது,என தொழிற் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 11:33 pm
மாணவி மணிஷாப்ரீத் கொலை வழக்கு; 48 மணி நேரத்திற்குள் தீர்க்கப்பட்டது: ஹுசைன் ஒமார் கான்
July 1, 2025, 11:28 pm
ஹிஷாமுடினின் இடைநீக்கம் குறித்து அம்னோ உச்சமன்றம் விவாதிக்கவில்லை: ஜாஹித்
July 1, 2025, 10:48 pm
பள்ளிக்கு முன் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஆடவர் உயிர் தப்பினார்
July 1, 2025, 1:08 pm