
செய்திகள் மலேசியா
பிரதமரின் நம்பிக்கை குறைந்ததை உணர்ந்தவுடன் பதவியை விலகினேன்: ரஃபிஸி ரம்லி
பெட்டாலிங் ஜெயா,
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தம்மீது நம்பிக்கை இழந்ததை உணர்ந்தவுடன், பொருளாதார அமைச்சர் பதவியை விலக முடிவு செய்ததாக பி.கே.ஆர் முன்னாள் துணைத்தலைவர் மற்றும் பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ரம்லி தெரிவித்தார்.
அண்மையில் நடந்த கட்சித் தேர்தலின்போது நூருல் இஸ்ஸா அன்வார் வேட்புமனு தாக்கல் செய்தது, அவரது தந்தையும் கட்சித் தலைவருமான அன்வாரின் முழுமையான ஒப்புதலுடன் நடைபெற்றதாக ரஃபிஸி கூறினார்.
“நூருல் இஸ்ஸா போட்டியிட்டபோது அவருக்குத் தொடர்ந்து அன்வாரின் ஆதரவு இருந்தது. இதன் பொருள் என்னவெனில், நான் ஏற்கும் நிர்வாகப் பொறுப்பில் அவர் நம்பிக்கையுடன் இல்லை என்பதையே காட்டியது" என அவர் குறிப்பிட்டார்
அத்தகைய சூழலில் தாம் அமைச்சராகத் தொடர்வது சரியல்லை என்றும், நம்பிக்கை இழந்த நிலையில் பதவியில் தொடர்வது, அமைச்சின் செயற்பாடுகளிலும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என அவர் ஃபேஸ்புக் நேரலையில் கூறியுள்ளார்
இதனிடையே கடந்த மே 27ஆம் தேதி, பொருளாதார அமைச்சர்பதவியில் இருந்து விலகுவதாக ரஃபிஸி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 1:08 pm
2025ஆம் ஆண்டுக்கான மலேசிய தின கொண்டாட்டங்கள்; பினாங்கில் நடைபெறும்: ஃபஹ்மி ஃபட்சில்
July 1, 2025, 1:06 pm