
செய்திகள் மலேசியா
1,000 மடானி பள்ளிகள் தத்தெடுப்புத் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்
கோலாலம்பூர்:
நாடு முழுவதும் 1,000 மடானி பள்ளிகளை தத்தெடுப்புத் திட்டத்தை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தொடக்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தை வெற்றியடையச் செய்வதில் அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்கள், முதலீட்டு நிறுவனங்கள், தனியார் துறையின் ஆதரவு வரவேற்கப்படுகிறது.
இது வெறும் சமூக கடப்பாடு திட்டம் அல்ல. மேலும் இதுவொரு பொறுப்பாகும்.
வெளிநாடுகளில் ஈர்க்கக்கூடிய வெற்றியைப் பெற்ற மலேசியாவை தளமாகக் கொண்ட தனியார் நிறுவனங்களின் வெற்றியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இதன் மூலம் ஒரு மடானி சமூகத்தை உருவாக்குவதற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டது என்று பிரதமர் கூறினார்.
மலேசியாவின் வளர்ச்சிக்கு இன்னும் பொறுப்பான சில நிறுவனங்களான யின்சன் ஹோல்டிங்ஸ், பெட்ரோனாஸ், புரோட்டான், இங்கிலாந்தில் மெகா திட்டங்களை செயல்படுத்தி வரும் ஒய்டிஎல் கார்ப்பரேஷன் ஆகியவையும் இத்திட்டத்தில் அடங்கும்.
இத்திட்டம் பள்ளிகளின் வசதிகளை மேம்படுத்த நிதி உதவி கிடைக்கும்.
மேலும் நிறுவனங்களும் பெருநிறுவன பிரமுகர்களும் மாணவர்களைச் சந்தித்து அனுபவங்களையும் கல்வியின் முக்கியத்துவத்தையும் பகிர்ந்து கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 1:08 pm
2025ஆம் ஆண்டுக்கான மலேசிய தின கொண்டாட்டங்கள்; பினாங்கில் நடைபெறும்: ஃபஹ்மி ஃபட்சில்
July 1, 2025, 1:06 pm