நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பல வளங்களை கொண்டுள்ள மலேசியா ஓர் அற்புதமான நாடு; பொருளாதார நிலைத் தன்மையை உறுதி செய்வோம்: கைரி

கோலாலம்பூர்:

பல வளங்களை கொண்டுள்ள ஓர் அற்புதமான நாடாக விளங்கும் மலேசியாவின் பொருளாதார நிலைத்தன்மையை அனைவரும் உறுதி செய்ய வேண்டும்.

முன்னாள் சுகாதாத அமைச்சர் கைரி ஜமாலுடின் இதனை வலியுறுத்தினார்.

முக்மின் ஏற்பாடு செய்திருந்த நோன்பு திறக்கும் விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி.

நான் அரசியலில் இருந்த போதிலும் வெளியே இருந்த போதிலும் முக்மின் ஒருங்கிணைப்பாளர் டத்தோ வீரா ஷாகுல் தாவூத் என்னுடன் உள்ளார்.

இதன் அடிப்படையில் தான் இந்திய முஸ்லிம் சமுதாய மக்களை சந்திக்கும் நோக்கில் இன்றைய நோன்பு திறக்கும் விழா நடைபெறுகிறது.

இந்த விழாவிற்கு எனது மறு அரசியல் பிரவேசத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. இதை நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

தற்போது உலக ரீதியில் நடக்கும் சம்பவங்களும் இதனால் பல நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் அனைவருக்கும் தெரியும்.

ஆனால் மலேசியாவைச் சேர்ந்த நாம் அனைவரும் அதிர்ஷ்டசாலிகள் என்று தான் கூற வேண்டும்.

பல்லின மக்கள் கொண்ட இந்த நாட்டில் நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்.

அதே வேளையில் பல வளங்களை கொண்ட நாடாகவும் மலேசியா விளங்குகிறது.

இதில் ஒன்றில் பிரச்சினை என்றால் மற்றொன்று நாட்டை காக்கும்.

ஆக இந்த வளங்களை எல்லாம் மலேசியர்களான நாம் பாதுகாக்க வேண்டும்.

குறிப்பாக மலேசியாவின் பொருளாதாரம் நிலைத் தன்மையுடன் இருப்பதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும்.

தேவையில்லாத பிரச்சினைகள், சர்ச்சைகள் வாயிலாக நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது.

குறிப்பாக நாட்டை காப்பதை ஒவ்வொரு மலேசியரின் கடமையாகும் என்று கைரி ஜமாலுடின் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்






தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset