நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்களை பிளவுப்படுத்தும் நபர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: கைரி

கோலாலம்பூர்:

மக்களை பிளவுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் இதனை வலியுறுத்தினார்.

நாட்டில் தற்போது நடந்து வரும் சம்பவங்கள் மக்களை பெரிய அளவில் பாதிக்கிறது.

குறிப்பாக மக்களிடையே பிளவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இதுபோன்ற சம்பவங்கள் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் தான் மிகப் பெரிய பாதிப்பு.

ஆக மக்களை பிளவுப்படுத்தும் நடவடிக்கைகள் முற்றாக ஒழிக்க வேண்டும்.

அதற்கு இதுபோன்ற சம்பவங்களின் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இந்த நடவடிக்கைகளின் எந்தவொரு பாராபட்சமும் பார்க்கப்படக் கூடாது.
தவறு யார் செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்பட வேண்டும்.

இந்த நடவடிக்கைகள் மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும்.

முக்மின் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கைரி ஜாமாலுடினுடனான நோன்பு திறப்பு விழாவை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த  நிகழ்வில் உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset