நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மீண்டும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: கிள்ளான் மேருவில் ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்

கிள்ளான்:

மோட்டார் சைக்கிள் விற்பனை கடைக்கு முன் ஆடவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் இன்று மதியம் மேருவின் தாமான் மேரு உத்தாமாவில் நிகழ்ந்தது என்று  வட கிள்ளான்  மாவட்ட போலிஸ்  தலைவர் எஸ். விஜயராவ் கூறினார்.

சம்பவம் குறித்த தகவல் பிற்பகல் 3.37 மணிக்கு அப்பகுதியில் பணியில் இருந்த ரோந்து வீரர்களிடமிருந்து கிடைத்தது.

தகவல் கிடைத்தவுடன், ஒரு போலிஸ் குழு சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்றது.

முதற்கட்ட விசாரணையில் வாகனத்தின் ஓட்டுநர் இருக்கையில் இரத்த வெள்ளத்தில் ஆடவர் இறந்து கிடந்தார். அவர் சுமார் 46 வயதுடைய உள்ளூர் ஆடவர் என கண்டறியப்பட்டது.

பாதிக்கப்பட்டவர் பின்னர் மருத்துவப் பணியாளர்களால் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது, என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

சந்தேக நபரையும் சம்பவத்திற்கான காரணத்தையும் அடையாளம் காண விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் விஜய ராவ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset