
செய்திகள் மலேசியா
புதிய கட்டண விலை பட்டியலில் மின்சாரக் கட்டணம் மிகவும் வெளிப்படையாக இருக்கும்: எரிசக்தி ஆணையம்
கோலாலம்பூர்:
புதிய கட்டண விலை பட்டியலில் மின்சாரக் கட்டணம் அனைத்தும் மிகவும் வெளிப்படையாக இருக்கும்.
எரிசக்தி ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சித்தி சபினா சாலே இதனை கூறினார்.
இந்த நடவடிக்கை ஒவ்வொரு வாடிக்கையாளரும் தங்கள் கட்டணத்தில் திறன், உற்பத்தி, நெட்வொர்க், சில்லறை விற்பனை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டணங்களின் விவரத்தை காண முடியும்.
ஒவ்வொரு விலை பட்டியலிலும் இந்தக் கட்டணங்கள் அனைத்தையும் நீங்கள் காணலாம்.
அதனால் அனைத்து பயனீட்டாளர்களும் தாங்கள் என்ன செலுத்துகிறோம் என்பதை அறிவார்கள் என்று அவர் இன்று புத்ராஜெயாவில் உள்ள ஆணையத்தின் தலைமையகத்தில் நடந்த ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்,
வரும் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் சராசரி அடிப்படை கட்டண விகிதம் 45.40 சென்/கிலோவாட் என திருத்தப்பட்டதற்கு ஏற்ப இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 1:08 pm
2025ஆம் ஆண்டுக்கான மலேசிய தின கொண்டாட்டங்கள்; பினாங்கில் நடைபெறும்: ஃபஹ்மி ஃபட்சில்
July 1, 2025, 1:06 pm