
செய்திகள் மலேசியா
தாமான் ஶ்ரீ மூடாவில் 6 மாதங்களில் 6 முறை வெள்ளம்; பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதி எங்கே?: உமா காந்தன் கேள்வி
ஷாஆலம்:
தாமான் ஶ்ரீ மூடா, புக்கிட் கமுனிங்கில் 6 மாதங்களில் 6 முறை வெள்ளம் ஏறியுள்ளது.
ஆனால் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதி மட்டும் கிடைக்கவே இல்லை என்று அம்மக்களின் பிரதிநிதியான உமா காந்தன் கூறினார்.
இன்று காலை முதல் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஷாஆலம் தாமான் ஶ்ரீ மூடா, புக்கிட் கமுனிங் உட்பட பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தாமான் கமுனிங்கில் 100 பேர் வெள்ள நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கடந்த 6 மாதங்களில் 6ஆவது முறையாக இப்பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் சுற்றுவட்டார மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
ஆனால் இதுவரை இழப்பீடுகள் கிடைக்கவில்லை.
இந்த வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த முறை சிலாங்கூர் மந்திரி புசாரை தேடி தாப்பா வரை சென்றோம்.
இந்நிலை நீடித்தால் இம்முறை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாரை தேடி நாடாளுமன்றம் செல்வோம்.
இது தான் எங்களின் அடுத்தக்கட்ட முடிவு என்று உமா காந்தன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 1:08 pm
2025ஆம் ஆண்டுக்கான மலேசிய தின கொண்டாட்டங்கள்; பினாங்கில் நடைபெறும்: ஃபஹ்மி ஃபட்சில்
July 1, 2025, 1:06 pm