
செய்திகள் மலேசியா
ஹம்சா சைனுடின் மாமியார் காலமானார்: பிரதமர் அன்வார் இரங்கல்
கோலாலம்பூர்:
நாட்டின் எதிர்கட்சி தலைவர் டத்தோஶ்ரீ ஹம்சா சைனுடினின் மாமியார் தீ விபத்தில் பலியான சம்பவம் குறித்து பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துகொண்டார்.
பிரதமர் அன்வார் இப்ராஹிம் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம் வாயிலாக இந்த இரங்கலைச் செய்தியை வெளியிட்டார்.
தனது மாமியாரை இழந்து வாடும் டத்தோஶ்ரீ ஹம்சா சைனுடின் குடும்பத்தினர் மன தைரியத்துடன் இருக்க வேண்டுகிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.
84 வயதான சால்மியா தீ விபத்தில் பலியானார். இந்த தீ விபத்து ஜாலான் ராஜா அப்துல்லா, கம்போங் சுங்கை ராபாட் பகுதியில் நிகழ்ந்தது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 1:08 pm
2025ஆம் ஆண்டுக்கான மலேசிய தின கொண்டாட்டங்கள்; பினாங்கில் நடைபெறும்: ஃபஹ்மி ஃபட்சில்
July 1, 2025, 1:06 pm