நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2025 தெற்கிழக்காசியாவில் பிரபலமான தீவுகள் பட்டியலில் லங்காவி, பினாங்கு தீவுகள் இடம்பெற்றுள்ளன

2025 தெற்கிழக்காசியாவில் பிரபலமான தீவுகள் பட்டியலில் லங்காவி, பினாங்கு தீவுகள் இடம்பெற்றுள்ளன

கோலாலம்பூர்: 

2025 ஆம் ஆண்டுக்கானதெற்கிழக்காசியாவிலுள்ள சிறந்த 10 தீவுகளின் பட்டியலில் இடம் மலேசியாவின் லங்காவி, பினாங்கு தீவுகள் இடம்பெற்றுள்ளன.

உலகப் புகழ்பெற்ற சுற்றுலா மாத இதழான Travel + Leisure இப்பட்டியலை அறிவித்துள்ளது.

இந்த பட்டியல், Travel + Leisure இதழின் வாசகர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. 

நாட்டின் பினாங்கு, லங்காவி ஆகிய இரு தீவுகள் ஆசிய-பசிபிக்கில் அதிகமாக சுற்றுப்பயணிகள் செல்லும் தீவுகள் என்ற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இது மலேசியாவின் சுற்றுலா துறை வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான அங்கீகாரமாகும் என்று பினாங்கு மாநிலத்தின் சுற்றுலா மற்றும் புத்தாக்க பொருளாதாரக்குழுத் தலைவர்  Wong Hon Wai தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த அங்கீகாரம், பினாங்கின் வளர்ந்து வரும் சர்வதேச சுற்றுலா மதிப்பை வெளிப்படுத்துகிறது என்றும் இது மாநிலத்தின் சுற்றுலா வளர்ச்சிக்கு ஊக்கமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சிறந்த தீவுகளின் பட்டியலில் இந்தோனேசியாவின் பாலி,சும்பா, தாய்லாந்தின் கோ சமுய்,பூக்கெட், வியட்நாமின் பு குவோக், பிலிப்பைன்ஸின் பலாவான் மற்றும் சியார்காவ், மற்றும் இலங்கையும் இடம்பிடித்துள்ளன.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset