
செய்திகள் மலேசியா
பெண்ணிடம் வழப்பறி கொள்ளை: தோட்டத்தொழிலாளி குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
கங்கார்:
கூர்மையான ஆயுதம் வைத்திருத்தல், பெண்ணிடம் வழிப்பறி கொள்ளை, பாதிக்கப்பட்ட பெண்ணுக்குக் காயம் விளைவித்தல் போன்ற குற்றங்களுக்காக அரசு துறையைச் சேர்ந்த தோட்டதொழிலாளிக்கு எதிராக இங்குள்ள கங்கார் செஷன்ஸ் நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்டது.
இருப்பினும், தனக்கு எதிரான குற்றத்தை மறுத்து குற்றஞ்சாட்டப்பட்ட தோட்டத்தொழிலாளி விசாரணை கோரினார். இரு குற்றச்சாட்டுகளையும் முறையாக விசாரிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த வழக்கு விசாரணையை அரசு துணை வழக்கறிஞர் முஹம்மத் அலிஃப் ஃபர்ஹான் ஹசான் நடத்திய வேளையில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக இரு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
முதல் குற்றச்சாட்டில், குற்றஞ்சாட்டப்பட்ட நபர் கூர்மையான ஆயுதம் கொண்டிருந்ததாகவும் இரண்டாவது குற்றச்சாட்டில் ஒரு பெண்ணிடம் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அல்லது அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.
இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூலை 21ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தால் மறு செவிமடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 11:33 pm
மாணவி மணிஷாப்ரீத் கொலை வழக்கு; 48 மணி நேரத்திற்குள் தீர்க்கப்பட்டது: ஹுசைன் ஒமார் கான்
July 1, 2025, 11:28 pm
ஹிஷாமுடினின் இடைநீக்கம் குறித்து அம்னோ உச்சமன்றம் விவாதிக்கவில்லை: ஜாஹித்
July 1, 2025, 10:48 pm