
செய்திகள் மலேசியா
நாட்டில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் தேவைகளுக்கு அரசாங்கம் செவி சாய்க்கும்: கல்வி துணையமைச்சர்
ஈப்போ:
நாட்டில் உள்ள தமிழ், சீனப்பள்ளிகளின் தேவைகளை நிறைவு செய்ய அரசாங்க உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
அவைகளின் மேம்பாட்டில் ஒரு போதும் கைவிடபடமாட்டாது என்று கல்வி துணையமைச்சர் வோங் கா வோ உறுதி அளித்தார்.
பேரா சுங்கை சிப்புட்டில் உள்ள டோவன் பி தோட்டத் தமிழ்ப் பள்ளிக்கு வருகை அளித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு பேசினார்.
அந்த வகையில் அண்மையில் சுப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் இரு புதிய பள்ளிகள் நிர்மாணிக்கப்பட்டதை நினைவுக் கூர்ந்தார்.
டோவன் பி தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கம் நில, நிதி ஒதுக்கீட்டை செய்துள்ளது.
அந்த இடத்தில புதிய பள்ளியை எழுப்ப முந்தைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அது தொடர்பாக தமது அமைச்சிடம் விவரங்கள் கேட்டறிய உள்ளதாக அவர் விளக்கம் அளித்தார்.
மேலும் பேசிய அவர் , இப் பள்ளியின் வளர்ச்சிக்கு 50 ஆயிரம் ரிங்கிட்டை வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
110 மாணவர்களை கொண்ட இப் பள்ளிக் கூடத்தில் இட வசதியில்லாத குறையை போக்க புதிய பள்ளிக் கூடம் அல்ல கூடுதல் வகுப்புறை தேவைகளை துணை அமைச்சர் வோங் கா வோவின் கவனத்திற்கு முன் வைத்துள்ளதாக பள்ளியின் தலைமையாசிரியை ராஜம்மாள் வீராசாமி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 2, 2025, 10:53 pm
ஸ்ரீ செர்டாங் சட்டமன்ற வாக்காளர்களுக்கே முன்னுரிமை; தனிநபர்களுக்கு அல்ல: அப்பாஸ்
July 2, 2025, 10:51 pm
பள்ளிக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய 2 சந்தேக நபர்களை போலிசார் தேடி வருகின்றனர்
July 2, 2025, 4:53 pm
பேருந்தைச் செலுத்தியவாறு கேம் விளையாடிய ஓட்டுநரின் காணொலி வைரல்
July 2, 2025, 4:48 pm
பிரிக்பீல்ட்ஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்: போலிஸ்
July 2, 2025, 4:47 pm
செராஸ், பிரிக்பீல்ட்ஸில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பில்லாதவை: போலிஸ்
July 2, 2025, 4:46 pm