நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பகாங் மாநில மசீச இளைஞர் பிரிவு தலைவருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் சீர்த்திருத்தத்தின் அடையாளம் அல்ல: அர்விந்த் கிருஷ்ணன்

கோலாலம்பூர்:

பகாங் மாநில மசீச இளைஞர் பிரிவு தலைவருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் சீர்த்திருத்தத்தின் அடையாளம் அல்ல.

மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் அர்விந்த் கிருஷ்ணன் இதனை வலியுறுத்தினார்.

அரசாங்கத்தின் கைத்தொலைபேசி தரவுச் சேகரிப்பு நடவடிக்கை குறித்து பகாங் மாநில மசீச இளைஞர் பிரிவு தலைவர்  வோங் சியூ மூன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இது தொடர்பில் அவர்  மீது  போலிசார் விசாரணை மேற்கொண்டதுடன் அவரின் கைத்தொலைபேசியை பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த சம்பவங்கள் குறித்து மஇகா இளைஞர் பிரிவு ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஒற்றுமை அரசாங்கத்தின் கூட்டணி கட்சி எனும் ரீதியில் மசீச இளைஞர் பிரிவு எழுப்பிய சந்தேகங்களுக்கு தகவல் தொடர்பு அமைச்சு தெளிவான விளக்கங்களை வழங்க வேண்டும்.

மாறாக போலிசாரின் விசாரணை வாயிலாக அச்சுறுத்தல் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதில் மஇகா இளைஞர் பிரிவு அதிர்ச்சி அடைந்துள்ளது.

நாட்டின் அமைதியைப் பேணும் காவல்துறையின் கடமைகள், நடவடிக்கைகளை மஇகா இளைஞர் பிரிவு பெரிதும் மதிக்கின்றது.

இருப்பினும், இச்சம்பவம் ஒரு அச்சுறுத்தல் நடவடிக்கையாகவும் ஓர் ஆபத்தான முன்னுதாரணமாகவும் அமைகிறது.

இந்த கைத்தொலைபேசி தரவுச் சேகரிப்பு திட்டத்தின் தெளிவற்ற விளக்கங்களும் அமலாக்கமும் மக்களின் தனியுரிமையை மீறக்கூடிய ஒன்று என்று பலரின் கருத்தினைத் தொட்டே வோங் சியூ மூன் அறிக்கையும் பிரதிபலிக்கின்றது.

அவரது கைத்தொலைபேசி  பறிமுதல் செய்யப்பட்டு, குற்றச் சட்டத்தின் பிரிவு 505,  தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் பிரிவு 233ன் கீழ் வாக்குமூலம் எடுக்கப்படுகிறது.

இது  அரசாங்கத்திற்கு எதிராக குரல் எழுப்பினால் சட்ட நடவடிக்கை பாயும் எனும் தோற்றத்தினை மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.

ஆக நாட்டின் சட்டத் திட்டங்கள் அமைதி, ஒழுங்கினை உறுதிப்படுத்தும் நோக்கில் அமைய வேண்டும்.

தவிர, குடிமக்களின் நியாயமான விமர்சனங்களையும் உரிமைகளையும் அடக்கும் வகையில் அமையக்கூடாது.

இதன் அடிப்படையில் மஇகா இளைஞர் பிரிவு, பகாங் மாநில மசீச இளைஞர் பிரிவு தலைவர் வோங் சியூ மூன் அவர்களுடன் முழுமையாக நின்று ஆதரிக்கின்றது.

மக்கள் நலன்களுக்காக குரல் எழுப்பும் இளைஞர்களின் மீதான அரசாங்கத்தின் அழுத்தத்தையும் அச்சுறுத்தல்களையும் நாங்கள் ஏற்க மாட்டோம்.

ஜனநாயகத்தின் எதிர்காலம், விமர்சனங்களை அடக்குவதில் இல்லை, மாறாக அவற்றை செவிசாய்ப்பதே ஆகும் என்று அர்விந்த் கிருஷ்ணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset