
செய்திகள் மலேசியா
சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சீனிக்கு வரி விதிக்கப்படாது: நிதியமைச்சகம் தகவல்
கோலாலம்பூர்;
ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவிருக்கும் மறுசீரமைக்கப்பட்ட விற்பனை மற்றும் சேவை வரி, எஸ்எஸ்டி-யின் கீழ் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சீனிக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சீனியின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூல சர்க்கரை பொருள்களுக்கு மட்டுமே ஐந்து விழுக்காடு விற்பனை வரி விதிக்கப்படும் என்று நிதியமமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இருப்பினும், எம்எஸ்எம் மலேசியா ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் போன்ற சீனி உற்பத்தியாளர்கள் மற்றும் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தங்கள் மூலப்பொருட்கள், உள்ளீடுகளுக்கு வரி விலக்கு பெற விண்ணப்பிக்க தகுதியுடையவை.
குறிப்பாக எம்.எஸ்எம் போன்ற சீனி சுத்திகரிப்பு நிறுவனங்கள் விநியோகம் மற்றும் விலை நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக அரசாங்கத்திடமிருந்து மாதாந்திர ஊக்கத்தொகையை பெறுவதால் சுத்திகரிக்கப்பட்ட சீனியின் விலையில் அதிகரிப்பு ஏற்படுவதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று அமைச்சு குறிப்பிட்டது.
விற்பனை வரி மறுமதிப்பீடு மூலம் எம்எஸ்எம் சர்க்கரை மீதான தாக்கம் குறித் அறிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக அமைச்சு இந்த அறிக்கையை வெளியிட்டது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 11:33 pm
மாணவி மணிஷாப்ரீத் கொலை வழக்கு; 48 மணி நேரத்திற்குள் தீர்க்கப்பட்டது: ஹுசைன் ஒமார் கான்
July 1, 2025, 11:28 pm
ஹிஷாமுடினின் இடைநீக்கம் குறித்து அம்னோ உச்சமன்றம் விவாதிக்கவில்லை: ஜாஹித்
July 1, 2025, 10:48 pm