நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டின் 15ஆவது போலீஸ் தலைவராக டத்தோஶ்ரீ முஹம்மத் காலித் இஸ்மாயில் நியமனம் 

கோலாலம்பூர்: 

புக்கிட் அமான் சிறப்பு பிரிவின் இயக்குநர் டத்தோஶ்ரீ ஹாஜி முஹம்மத் காலித் பின் ஹாஜி இஸ்மாயில் நாட்டின் 15ஆவது போலீஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

ஐ.ஜி.பியாக இருந்த டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைனின் பதவிக்காலம் ஜூன் 22ஆம் தேதி நிறைவடையும் நிலையில் இன்று ஜூன் 20ஆம் தேதி பதவி ஒப்படைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் புதிய ஐ.ஜி.பியாக டத்தோஶ்ரீ காலித் பின் ஹாஜி இஸ்மாயில் நியமிக்கப்பட்டார். 

மே 2023ஆம் ஆண்டு முதல் புக்கிட் அமானின் சிறப்பு பிரிவின் இயக்குநராக அவர் பொறுப்பு வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset