நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிரம்பானில் உள்ள வீடொன்றில் மூன்று குடும்ப உறுப்பினர்கள் சடலமாக கண்டுப்பிடிப்பு 

சிரம்பான்: 

சிரம்பானில் உள்ள வீடொன்றில் மூன்று குடும்ப உறுப்பினர்கள் சடலமாக கண்டுப்பிடிக்கப்பட்டனர். 

இந்த சம்பவம் திங்கட்கிழமை மாலை 4.53 மணிக்கு தாமான் புக்கிட் கிரிஸ்டல் எனும் பகுதியில் நிகழ்ந்தது. 

பூட்டிய வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதாக பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தங்கள் தரப்புக்குத் தகவல் கிடைத்ததாக சிரம்பான் மாவட்ட காவல்துறை தலைவர் முஹம்மத் ஹத்தா செ டின் கூறினார். 

வீட்டின் கதவை உடைத்த நிலையில் படுக்கை அறையில் மூன்று உடல்கள் இருப்பதை தீயணைப்பு, மீட்புப்படையினர் உறுதிசெய்தனர். 

குடும்ப உறுப்பினர்களில் 61 வயது முதிர்ந்த ஆடவர், 59 வயது அவரின் மனைவி, மற்றும் 30 வயது மகன் என்ற முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. 

இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட மூன்று உடல்களும் உடற்கூறு ஆய்வுக்காக ரெம்பாவ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. 

இந்த சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset