நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஐந்து வாகனங்கள் எரியூட்டப்பட்ட சம்பவம்: நான்கு சந்தேக நபர்களைப் போலீஸ்  தேடி வருகிறது 

ஷா ஆலாம்: 

ஐந்து ஆடம்பர வாகனங்களை எரியூட்டியதாக சந்தேகிக்கப்படும் நான்கு சந்தேக நபர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

இந்த வாகனங்கள் யாவும் பண்டார் சௌஜானா புத்ரா, பண்டார் ட்ரோபிகானா அமான் எனும் பகுதியில் எரியூட்டப்பட்டது. 

வாகனங்கள் எரியூட்டப்பட்டதாக தங்கள் தரப்புக்கு அவசர அழைப்பு காலை 6.45 மணிக்குக் கிடைத்ததாக கோல லங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் முஹம்மத் அக்மால்ரிசால் கூறினார். 

வாகனங்கள் எரியூட்டப்பட்ட போது வாகனங்களின் உரிமையாளரும் அவரின் குடும்ப உறுப்பினர்களும் வீட்டில் இல்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. 

குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 435இன் கீழ் இந்த சம்பவம் விசாரணை செய்யப்படுகிறது. 

பாதிக்கப்பட்ட நபருக்கு 1.6 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டதாகவும் அக்மால் ரிசால் சொன்னார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset