நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்கிறது: பிரதமர்

ரோம்:

மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களுக்கு மடானி அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருகிறது.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

மடானி அரசாங்கம் மக்களுக்கு பயனளிக்கும் வளர்ச்சி,  திட்டங்களை செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக கடுமையான மற்றும் சில நேரங்களில் பிரபலமற்ற முடிவுகளை எடுக்க தயாராக உள்ளது.

மூன்று நாள் பணி பயணமாக ரோம்  வந்துள்ள பிரதமர், மானியங்கள் அல்லது கட்டணங்களை பகுத்தறிவு செய்தல் போன்ற சில கொள்கைகளை செயல்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து விமர்சனங்கள் இருந்தாலும், அவை மக்களின் நலனுக்காக செய்யப்பட வேண்டும்.

முந்தைய அனைத்து அரசாங்கங்களும் முந்தைய அனைத்து பிரதமர்களும் வெளிநாட்டினர் அனுபவிக்கும் மானியங்கள் திரும்பப் பெறப்படும் என்று கூறியுள்ளனர்.

ஆனால் யாரும் பொருத்தமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் நேற்று இரவு மலேசிய புலம்பெயர்ந்தோருடனான நட்பு சந்திப்பில் அவர்  கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset