நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புத்ரா ஹைட்ஸ் சம்பவம் குறித்து சட்டமன்றக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சி கேள்வி எழுப்பும்: அஸ்மின்

ஷாஆலம்:

புத்ரா ஹைட்ஸ் சம்பவம் குறித்து எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் வரும் சிலாங்கூர் சட்டமன்றக் கூட்டத் தொடரில் கேள்வி எழுப்புவார்கள்.

தேசியக் கூட்டணி பொதுச் செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான டத்தோஶ்ரீ அஸ்மின் அலி இதனை தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்த  கேள்விகளுக்கு அரசாங்க அறிக்கைகள் பதிலளிக்க தவறி விட்டது.

மேலும் பெட்ரோனாஸின் கண்காணிப்பு,  பராமரிப்பு பணிகள் தொடர்பான விரிவான தகவல்களுக்கான கோரிக்கைகள் உட்படபல கேள்விகளுக்கு மாநில அரசு பதிலளிக்க வேண்டும்.

வணிக அம்சத்தை மட்டும் பார்க்காமல், மனிதநேயம், மனித வாழ்க்கையின் பாதுகாப்பு கொள்கைகளையும் நாம் பார்க்க வேண்டும்.

ஆனால் மாநில அரசு வெளியிடப்பட்ட அறிக்கை இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் பதிலளிக்கவில்லை.

எனவே, ஜூலை 7 ஆம் தேதி நடைபெறும் சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தொடரில் சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த விவகாரத்தை எழுப்புவார்கள் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset