
செய்திகள் மலேசியா
சுகாதார காப்பீட்டு திட்டம் கட்டாயமல்ல: ஜுல்கிஃப்லி அஹமத்
கோலாலம்பூர்:
அரசு பரிந்துரைத்துள்ள சுகாதார காப்பீட்டுத் திட்டத்திற்கு ஊழியர் சேம நிதி (EPF)-யின் இரண்டாவது கணக்கு மூலமாக நிதியளிக்கப்படும் என்றாலும் அது கட்டாயமல்ல என்று சுகாதார அமைச்சர் Datuk Seri Dr Dzulkefly Ahmad தெரிவித்தார்.
32% மருத்துவ காப்பீடு இல்லாத பொது மக்கள் சிகிச்சைக்கான முழுமையான கட்டணத்தைக் கட்டும் சூழல் உள்ளது.
ஊழியர் சேம நிதி (EPF)-யின் இரண்டாவது கணக்கில் உள்ள பணத்தை கொண்டு பொது மக்கள் சுகாதார காப்பீட்டு திட்டம் பயன்படுத்தலாம்.
இருப்பினும் இது கட்டாயமாக்கப்படவில்லை என்று Dzulkefly Ahmad குறிப்பிட்டார்.
மலேசியாவிலும் நடைமுறைக்கு வந்தால் 16 மில்லியன் EPF சந்தாதாரர்கள் தங்களின் சொந்த சந்தா பணத்தில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறும் வாய்ப்பைப் பெறுவர் என்றார்.
இதனைக் கருத்தில் கொண்டே இந்தஊழியர் சேம நிதி (EPF)-யின் இரண்டாவது கணக்கைப் பயன்படுத்த மக்களை அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 11:43 pm
தமிழர்களின் இசையை வாசிக்கும் கலைஞர்களை நாம் நேசிக்கப் பழகுவோம்: டத்தோஸ்ரீ சரவணன்
July 12, 2025, 11:41 pm
நீதித்துறையை சுதந்திர பேரணி: புத்ராஜெயாவில் போலிஸ் பாதுகாப்பை அதிகரிக்கும்
July 12, 2025, 11:39 pm
நீதித்துறை பிரச்சினைகள் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விளக்கப்பட்டன: பிரதமர்
July 12, 2025, 1:47 pm