
செய்திகள் மலேசியா
குற்றம் நிரூபிக்கப்படும் வரை நஜிப் நிரபராதி தான்: நீதிபதி
கோலாலம்பூர்:
குற்றம் நிரூபிக்கப்படும் வரை டத்தோச்ஶ்ரீ நஜிப் நிரபராதி தான் உயர் நீதிமன்ற நீதிபதி கே. முனியாண்டி கூறினார்.
பொது நலனைப் பாதுகாக்க, குற்றவாளியை விடுவிக்கும் நீதிமன்றத்தின் அதிகாரத்தை எச்சரிக்கையுடனும், தேவைப்படும் போது பொது நலனைப் பாதுகாக்கவும் பயன்படுத்த வேண்டும்.
மூன்று பணமோசடி குற்றச்சாட்டுகளில் இருந்து டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் விண்ணப்பத்தை விடுவிக்க அனுமதித்தக்கப்பட்டது.
இதனால் எதிர்காலத்தில் அல்லது நியாயமான நேரத்திற்குள் வழக்குத் தொடர முடியும் என்பதைக் காட்ட எந்த ஆதாரமும் இல்லை.
தீர்ப்பை வாசித்த போத்உ பிரதிவாதிகள் கோரியபடி விடுவிக்கும் உத்தரவு வழங்கப்பட்டால் வழக்குத் தொடர எந்தப் பாதகமும் ஏற்படாது என்று துணை அரசு வழக்கறிஞரே ஒப்புக்கொண்டார்.
எனவே, ஒட்டுமொத்த சூழ்நிலைகளின் அடிப்படையில், 2014 இல் நடந்ததாகக் கூறப்படும் பணமோசடி குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையைத் தொடர அரசு தரப்பு இப்போது தயாராக இல்லை.
ஆக ஒரு வழக்கில் ஒருவர் விடுவிக்கப்படுவாரா இல்லையா என்பது ஒவ்வொரு வழக்கின் சூழ்நிலையையும் பொறுத்தது.
ஒவ்வொரு வழக்கின் தகுதியின் அடிப்படையில் முடிவு செய்யப்பட வேண்டும். பொது நலன் மற்றும் காலவரையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகாமல் இருக்க குற்றம் சாட்டப்பட்டவரின் உரிமையை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
எனவே, ஒரு குற்றம் சாட்டப்பட்டவர் மீது குற்றம் சாட்டப்படும்போது அவர் யாராக இருந்தாலும், அவருக்கு உரிய சட்ட நடைமுறை, விரைவான நீதி கிடைக்க உரிமை உண்டு என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 11:43 pm
தமிழர்களின் இசையை வாசிக்கும் கலைஞர்களை நாம் நேசிக்கப் பழகுவோம்: டத்தோஸ்ரீ சரவணன்
July 12, 2025, 11:41 pm
நீதித்துறையை சுதந்திர பேரணி: புத்ராஜெயாவில் போலிஸ் பாதுகாப்பை அதிகரிக்கும்
July 12, 2025, 11:39 pm
நீதித்துறை பிரச்சினைகள் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விளக்கப்பட்டன: பிரதமர்
July 12, 2025, 1:47 pm