நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நோன்பு திறப்புடன் ரமலான் உதவிகள் சமூகத்தில் ஒற்றுமையும் அன்பின் உணர்வையும் வலுப்படுத்துகிறது: டத்தோ சிவக்குமார்

கோலாலம்பூர்:

நோன்பு திறப்புடன் ரமலான் உதவிகள் சமூகத்தில் ஒற்றுமையும் அன்பின் உணர்வையும் வலுப்படுத்துகிறது.

மஹிமா, டிஎஸ்கே சமூக நல சங்கத்தின் தலைவருமான டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.

டிஎஸ்கே சமூக நல சங்கத்தின் ஏற்பாட்டில் நோன்பு திறப்புடன் ரமலான் உதவிகள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி கோலாலம்பூர் ஜாலான் புத்ராவில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முக்கிய அங்கமாக  தனித்து வாழும் தாய்மார்கள், ஆதரவற்ற பிள்ளைகள், பி40 குழுவிற்கு ரொக்க அன்பளிப்புகள் வழங்கப்பட்டது.

இந்த முயற்சி தேவைப்படுபவர்களுக்கு பயனளிக்கும்.

மேலும் சமூகத்தில் ஒற்றுமை அன்பின் உணர்வை வலுப்படுத்துகிறது என்று தாம் நம்புவதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset