நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திடீர் வெள்ளத்தால் தாமான் புக்கிட் கமுனிங்கில் வசிக்கும் 100க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்

ஷாஆலம்:

திடீர் வெள்ளத்தால் தாமான் புக்கிட் கமுனிங்கில் வசிக்கும் 100க்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

ஷாஆலம் வட்டார தீயணைப்புப் படைத் தலைவர் அஹ்மத் ஜைடி சபுவான் இதனை கூறினார்.

இன்று அதிகாலை 4 மணி முதல் பெய்த கனமழையைத் தொடர்ந்து தாமான் புக்கிட் கமுனிங் சுற்றுவட்டாரத்தில் வெள்ளம் ஏறியது.

இதனால் அங்கு வசிக்கும் 100க்கும் மேற்பட்டோர் வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் 180 வீடுகளை பாதிக்கப்பட்டதுடன் சில பகுதிகளில் ஒரு மீட்டருக்கும் அதிகமான தண்ணீர் வெள்ளத்தில் மூழ்கியது.

ஆனால் அனைத்து குடியிருப்பாளர்களும் வெளியேற விரும்பவில்லை என்று அவர் கூறினார்.

ஷாஆலம் நகராண்மை கழகம்,  மலேசிய பொது  பாதுகாப்புப் படை,  உள்ளூர் தன்னார்வலர்கள் குழு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து,   மீட்புப் படகு மூலம் மீட்புப் பணி மேற்கொண்டனர்.

பலர் இன்னும் தங்கள் வீடுகளை நேசிப்பதாகக் கூறி வெளியேற மறுக்கிறார்கள்.

கனமழை மீண்டும் வந்தால், அது மீட்புப் பணியை சிக்கலாக்கும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset