
செய்திகள் மலேசியா
நஜிப் விடுதலையை மதிக்கிறேன்; தாமதத்திற்கு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் பதிலளிக்க வேண்டும்: ரபிசி
கோலாலம்பூர்:
எஸ்ஆர்சி வழக்கில் டத்தோஶ்ரீ நஜிப்பை விடுவித்த நீதிமன்றத்தின் முடிவை நான் மதிக்கிறேன்.
ஆனால் இந்த வழக்கின் தாமதத்திற்கு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் பதிலளிக்க வேண்டும் என்று டத்தோஶ்ரீ ரபிசி ரம்லி வலியுறுத்தினார்.
எஸ்ஆர்சி நிதிகள் தொடர்பான பணமோசடி வழக்கில் முன்னாள் பிரதமர் டத்தோச்ஶ்ரீ நஜிப் ரசாக் விடுவிக்கப்பட்டார்.
2019 முதல் நீண்ட காலமாகக் காத்திருக்கும் டத்தோஸ்ரீ நஜிப்பின் இந்த விண்ணப்பத்தின் உரிமையை நான் மதிக்கிறேன்.
அதே வேளையில் இந்த விண்ணப்பத்தை அனுமதிக்கும் நீதிபதி கே. முனியாண்டியின் முடிவையும் நான் மதிக்கிறேன்.
ஆனால் வழக்கைத் தொடங்கத் தேவையான ஆவணங்களைத் தயாரிக்க வழக்கறிஞர் ஏன் 2019 முதல் இவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டனர்.
இதற்கான காரணம் என்னவென்று எனக்குப் புரியவில்லை? என்று அவர் கூறினார்.
சாட்சியம் எதுவும் வழங்கப்படாமல் ஆறு ஆண்டுகள் வழக்குத் தொடர்ந்ததாக நீதிபதி முனியாண்டி கூறினார்.
மேலும் ஒரே ஒரு ஒத்திவைப்புடன் வழக்கு விசாரணையைத் தொடர அரசு தரப்பு தயாராக இல்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஆதாரமாகத் தேவையான முக்கியமான ஆவணங்களை இன்னும் பெற்று சேகரிக்காததால்,
இந்த வழக்கை விரைவில் விசாரிக்க அரசு தரப்பு இன்னும் தயாராக இல்லை எனவும் கூறப்பட்டது.
ஆகவே இந்த விவகாரத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் உரிய பதிலை தர வேண்டும் என ரபிசி வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 2, 2025, 10:13 am
மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்கிறது: பிரதமர்
July 2, 2025, 10:02 am
ஐந்து வாகனங்கள் எரியூட்டப்பட்ட சம்பவம்: நான்கு சந்தேக நபர்களைப் போலீஸ் தேடி வருகிறது
July 2, 2025, 9:57 am
சிரம்பானில் உள்ள வீடொன்றில் மூன்று குடும்ப உறுப்பினர்கள் சடலமாக கண்டுப்பிடிப்பு
July 1, 2025, 11:33 pm
மாணவி மணிஷாப்ரீத் கொலை வழக்கு; 48 மணி நேரத்திற்குள் தீர்க்கப்பட்டது: ஹுசைன் ஒமார் கான்
July 1, 2025, 11:28 pm