செய்திகள் மலேசியா
வட்டார முன்னேற்றங்கள் குறித்து ஈரானிய வெளியுறவு அமைச்சருடன் டத்தோஸ்ரீ அன்வார் விவாதித்தார்
புத்ராஜெயா:
மத்திய கிழக்கின் வட்டார முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்க பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சியுடன் தொலைபேசியில் உரையாடினார்.
ஈரானிய வெளியுறவு அமைச்சின் கூற்றுப்படி,
அழைப்பின் போது, நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவுக்கும், அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானிய மக்களுக்கும் டத்தோஸ்ரீ அன்வர் தனது இரங்கலைத் தெரிவித்தார்.
ஈரானுக்கு எதிரான அமெரிக்கா, இஸ்ரேலின் இராணுவ ஆக்கிரமிப்பையும் அவர் கடுமையாகக் கண்டித்தார்.
இது சர்வதேச விதிகள், கொள்கைகள், தார்மீக விதிமுறைகளுக்கு முரணானது என்று அவர் விவரித்தார் என அமைச்சு வெள்ளிக்கிழமை எக்ஸ் தளத்தில் ஒரு பதிவில் தெரிவித்துள்ளது.
பிரதமர், வட்டார நாடுகளின் தலைவர்களுடன் தற்போது நடத்தி வரும் அரசியல் பேச்சுவார்த்தைகளையும் குறிப்பிட்டு, ஆக்கிரமிப்புப் போரை உடனடியாக நிறுத்தவும், அமைதி, நிலைத்தன்மையை மீட்டெடுக்கவும் அழைப்பு விடுத்தார்.
இந்த விஷயத்தில் மலேசியா எல்லா முயற்சிகளையும் எடுக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 7, 2026, 12:37 pm
சபிண்டோ ரமலான் பசாரில் ஏற்பட்ட மோதல்: 8 பேர் கைது
March 7, 2026, 11:56 am
புத்ராஜெயா ஏரியில் சுற்றுலா படகு தீப்பற்றியது
March 7, 2026, 11:29 am
அரசு SEGiM அமைப்பை உருவாக்க ஒப்புதல்: துணைப் பிரதமர்
March 7, 2026, 11:05 am
கார் ஓட்டுநர் தூங்கியதால் சோகமாக முடிந்த பயணம்
March 7, 2026, 10:59 am
கத்தாரில் உள்ள 323 மலேசியர்கள் அடுத்த வாரம் நாட்டிற்கு அழைத்து வரப்படுவார்கள்
March 7, 2026, 10:40 am
