செய்திகள் மலேசியா
அம்னோவில் மீண்டும் இணைய கைரி விருப்பம்
கோலாலம்பூர்:
ருமா பங்சா திட்டத்தின் கீழ் மீண்டும் அம்னோவில் இணைய கைரி ஜமாலுடினில் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
கடந்த 2023 இல் அம்னோவில் இருந்து நீக்கப்பட்டார்.
அதன் பின்னர் நேற்றிரவு ருமா பங்சா திட்டத்தின் மூலம் அக்கட்சியில் மீண்டும் சேர விரும்புவதாக பகிரங்கமாக அறிவித்தார்.
கெலுார் செகஜாப் நிகழ்ச்சியில் முன்னாள் சுகாதார அமைச்சருமான கைரி,
தனது செய்தித் தொடர்பாளர் ராஜா சியாஹ்ரிர் ராஜா அபு பாக்கரிடம் அந்த நோக்கத்திற்காக ஒரு விண்ணப்பக் கடிதத்தை வரையுமாறு அறிவுறுத்தினார்.
உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அல்லது இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் நிபந்தனைகள் இல்லாமல் மீண்டும் அம்னோவில் சேரலாம்.
ருமா பங்சா முன்முயற்சியின் கீழ் அம்னோவில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் போராட்டத்தில் சேர விரும்பும் எந்தவொரு நபருக்கும் இது திறந்திருக்கும் என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி கூறினார்.
குறிப்பாக மலாய் சமூகத்தை ஒன்றுப்படுத்தும் திட்டமாக ரூமா பங்சாவையும் அவர் அறிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 7, 2026, 12:37 pm
சபிண்டோ ரமலான் பசாரில் ஏற்பட்ட மோதல்: 8 பேர் கைது
March 7, 2026, 11:56 am
புத்ராஜெயா ஏரியில் சுற்றுலா படகு தீப்பற்றியது
March 7, 2026, 11:29 am
அரசு SEGiM அமைப்பை உருவாக்க ஒப்புதல்: துணைப் பிரதமர்
March 7, 2026, 11:05 am
கார் ஓட்டுநர் தூங்கியதால் சோகமாக முடிந்த பயணம்
March 7, 2026, 10:59 am
கத்தாரில் உள்ள 323 மலேசியர்கள் அடுத்த வாரம் நாட்டிற்கு அழைத்து வரப்படுவார்கள்
March 7, 2026, 10:52 am
