நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேரா மாநிலத்தில் முக்மினின் ரமலான் பயணம்: வசதிக் குறைந்த மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது

ஈப்போ:

ரமலான் மாதம் முழுவதும் ஏழை சமூகத்திற்கு உதவும் முயற்சியாக முக்மின் ரமலான் பயணத் திட்டத்தை தொடங்கியுள்ளது.

இந்த பயணத்தில் இன்று முக்மின் குழுவினர் பேரா மாநிலத்திற்கு சென்றனர்.

பூசிங் அர்-ரஹ்மான் பள்ளிவாசல், சுங்கை சிப்புட் மஸ்ஜித் இந்தியா முஸ்லிம், கோல கங்சார்  இந்தியா முஸ்லிம் பள்ளிவாசல் ஆகிய மூன்று பள்ளிவாசல்களில் தேவைப்படுவோருக்கு உதவிகள் வழங்கப்பட்டது.

பூசிங்  அர்-ரஹ்மான் பள்ளிவாசலில் தேவைப்படுபவர்களுக்கு 100 உதவிப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.

100 ஆண்டுகள் வரலாற்றை கொண்ட இந்த பள்ளிவாசல் உள்ளூர் சமூகத்தின் வழிபாட்டு, நலனுக்கான மையமாகத் தொடர்கிறது.

சுங்கை சிப்புட் மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் பள்ளிவாசலில் ரமலான் மாதம் முழுவதும் மக்களின் சுமைகளைக் குறைக்க உதவி பெறத் தகுதியான குடும்பங்களுக்கு 150 உதவிப் பொருட்கள்  வழங்கப்பட்டது.

கோல கங்சார் மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் பள்ளிவாசலில்  45 பேருக்கு உதவிப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டது.

உணவு கூடை உதவிக்கு கூடுதலாக, மூன்று பள்ளிவாசல்களின் தேவைகள், நல நடவடிக்கைகளை ஆதரிப்பதற்காக நிதியுதவிகளும் வழங்கப்பட்டது.

இந்த முக்மின் ரமலான் பயணத் திட்டம் சமூகத்திற்கு பயனளிக்கும்.

ரமலான் மாதத்தில் வாழ்வாதாரத்தையும் அக்கறையையும் பகிர்ந்து கொள்ளும் உணர்வை மேலும் ஊக்குவிக்கும் என்று முக்மின் ஒருங்கிணைப்பாளர் டத்தோ வீரா ஷாகுல் தாவூத் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset